இங்கிலாந்து போறீங்களா... 6-ம் தேதி முதல் விமானங்கள் மீண்டும் இயக்கம்... ஆனால் சில கட்டுப்பாடுகள்!
டெல்லி: இந்தியா-இங்கிலாந்து இடையே நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை ஜனவரி 6 முதல் மீண்டும் தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
ஜனவரி 23-ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் இரு மார்க்கத்திலும் தலா 15 விமானங்கள் இயக்கப்படும் எனவும் அதன்பின்னர் புதிய அட்டவணை வெளியிடப்படும் எனவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சறுத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டுடன் போக்குவரத்து உள்ளிட்ட தொடர்புகளை பல்வேறு நாடுகள் நிறுத்தி வைத்தன. இந்தியாவும் இங்கிலாந்து நாட்டுக்கு விமானங்கள் செல்லவும், அங்கிருந்து விமானங்கள் வருவதற்கும் தடை விதித்தது. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த விமான சேவை வரும் 6-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் கூறியதாவது:-
வருகிற ஜனவரி 6-ம் தேதி முதல் இந்தியாவிற்கும்-இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்கள் சேவை மீண்டும் தொடங்கப்படும். இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 6-ம் தேதியும், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு 8-ம் தேதி முதல் விமானங்கள் சேவை தொடங்கும். ஒவ்வொரு வாரமும் 30 விமானங்கள் இயக்கப்படும்.
இரு மார்க்கத்திலும் தலா 15 விமானங்கள் இயக்கப்படும். இந்த அட்டவணை வருகிற 23-ம் தேதி வரை மட்டுமே இருக்கும். அதன்பிறகு நிலையை பரிசீலித்து அடுத்தக்கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications