Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகவிலைப்படி 3% உயர்வு.. தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட்நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இன்று 3 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களக்கு டிஏ என கூறப்படும் அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.

da hike dearness allowance union government

அதாவது அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் பணவீக்கத்தை பொருத்து அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் என்பது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதம் வரை தாமதம் செய்யப்பட்டு அதன்பிறகு முன்தேதியிட்டு வழங்கப்படும்.

இந்நிலையில் தான் தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு அகவிலைப்படி என்பது 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இப்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தில் இருந்து 53 என்று அதிகரித்துள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என்று மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர். இந்த மாத இறுதியில் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளதன் மூலம் மோடியின் அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கி உள்ளது.

இருப்பினும் கூட மத்திய அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் இருந்து இன்னொரு அறிவிப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன். அதாவது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கான அரியர்ஸ் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை. அந்த அரியர்ஸ் தொகை அறிவிப்பையும் மத்திய அரசு விரைவில் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரியர்ஸ் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+