சளி டூ காய்ச்சல் வரை.. 156 மாத்திரைகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை! பாராசிட்டமால் உள்பட முழு லிஸ்ட்
டெல்லி: காய்ச்சல், உடல் வலி, சளி, அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நாம் பயன்படுத்தி வரும் 156 வகையான ஃஎப்டிஎஸ் வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதில் பாராசிட்டமால் உள்பட நாம் அவ்வப்போது பயன்படுத்தும் மாத்திரைகளும் அடங்கும்.
நம் நாட்டில் பயன்படுத்தும் மாத்திரை, மருந்துகள் அனைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் மாத்திரை, மருந்துகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதனை தடை செய்ய மத்திய சுகாதாரத்துறைக்கு முழு உரிமை உள்ளது.
அந்த வகையில் தான் தற்போது நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள ஃஎப்டிசி பிரிவை சேர்ந்த 156 ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் (Fixed Dose Combination or FDC) வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃஎப்டிசி மாத்திரைகள் என்பது காக்டெய்ல் எனவும் அழைக்கப்படுகிறது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களின் நிர்ணயித்த அளவில் இணைத்து இந்த மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் ஃஎப்டிசி அல்லது காக்டெய்ல் மாத்திரைகள் என்று அழைக்கின்றனர்.
இத்தகைய சூழலில் தான் 156 வகையான ஃஎப்டிசி மாத்திரைகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. அதன்படி 'Aceclofenac 50mg + Paracetamol 125mg tablet', Mefenamic Acid + Paracetamol Injection, Cetirizine HCl + Paracetamol + Phenylephrine HCl, Levocetirizine + Phenylephrine HCl + Paracetamol, Paracetamol + Chlorpheniramine Maleate + Phenyl Propanolamine, and Camylofin Dihydrochloride 25 mg + Paracetamol 300mg உள்பட 156 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாராசிட்டமால் (Paracetamol), டிராமடோல்( Tramadol), ஃடவ்ரின் (Taurine) மற்றும் கஃபைன் (Caffeine) உள்ளிட்டவற்றின் கலவையில் உள்ள மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளில் பலவற்றை பொதுமக்கள் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, சலி, அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மருந்து தொழில்நுட்ப அறிவுரை வாரியம் (DTAB or Drugs Technical Advisory Board) அட்வைஸ் வழங்கிய நிலையில் மத்திய சுகாதாரத்துறை இந்த 156 வகையான மாத்திரைகளை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 12ம் தேதி மத்திய அரசின் அரசிதழில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாத்திரைகள் அனைத்தும் 1940ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருந்து மற்றும் அழகு சாதனங்களுக்கான சட்டம் பிரிவு 26ஏ பிரிவின்கீழ் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஃஎப்டிசி மாத்திரைகளுக்கு பதிலாக மார்க்கெட்டில் பாதுகாப்பான மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் மத்திய அரசு இப்படி குறிப்பிட்ட வகை மாத்திரைகளை தடை செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 344 மாத்திரைகளுக்கு நிபுணர் குழு பரிந்துரையின்பேரில் மத்திய அரசு தடை செய்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதன்படி 328 மாத்திரைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் 14 வகையான ஃஎப்டிசி மாத்திரைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து இப்போது 156 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications