100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாறுகிறது.. என்ன தெரியுமா? மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதா..
டெல்லி: MNREGA எனும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் வேலையில்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் தான் தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் திட்டமாகும். கிராமப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின்படி தற்போது கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பலனடைந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகின்றனர்.
பஞ்சாயத்து அளவில் குளம், கால்வாய் உள்பட நீர்நிலைகளை ஆழப்படுத்துவது உள்பட, சாலை விரிவாக்க பணிக்கு உதவுவது என வேலைகள செய் வருகின்றனர். இந்த திட்டத்தை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. மறைந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வந்தார். இந்த திட்டத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக MNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) என்பார்கள்.
இந்த திட்டத்துக்கு முதலில் வைத்த பெயர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பதாகும். அதன்பிறகு 2009 ம் ஆண்டில் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 154 மில்லியன் மக்கள் (அதாவது 15.4 கோடி பேர்) பயனடைந்து வருகின்றனர். இதில் 3ல் ஒருவர் பெண்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலையுடன் சம்பளம் கிடைக்கிறது.
இந்நிலையில் தான் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று தான் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றுவது. தற்போது உள்ள இந்த பெயரை ‛பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா' என பெயர் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதற்கான மசோதா நடப்பு குளர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிய மசோதாவின் மூலம் ஆண்டுக்கு வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கையை 125 அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்வதற்கான பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications