பரந்தூர் விமான நிலையம்.. மத்திய அரசு கொடுத்த வாக்குறுதி.. டெல்லியில் பழனிவேல் தியாகராஜன்!
டெல்லி: பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஜோதிராத்திய சந்தியா மற்றும் நிதின் கட்கரி ஆகியோரை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலாவதாக சந்தித்தேன். இதுவரை அவரை சந்தித்ததில்லை. மரியாதை நிமித்தமாகவும், தமிழ்நாட்டில் சிறிய பிரச்சினை வந்த போது உதவி செய்தார். அதற்காக சந்தித்து நன்றி கூறினேன்.

தமிழ்நாட்டில் முதலீடுகள்
திமுக ஆட்சி அமைந்த பின் தமிழ்நாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கும், தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை, சந்திப்புகள், கண்காணிப்புகள், விதிமுறைகள் அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய கடமை அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்ளது.

நிதின் கட்கரி - பிடிஆர் சந்திப்பு
அதன் அடிப்படையில் இணைந்து செயல்படுவது தொடர்பான சில ஆலோசனைகள் செய்யப்பட்டது. அதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தேன். அதேபோல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தேன். கடந்த முறை சந்தித்த போது, சில கோரிக்கைகளை அவரிடம் வைத்தேன். அதற்கு நிதின் கட்கரி, நேரில் வந்து சந்திக்குமாறு கூறினார்.

தனிப்பட்ட கருத்துக்கள்
மதுரை - கொச்சி நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்தேன். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனிப்பட்ட சில கருத்துக்களை தெரிவிக்க சொன்னார். அதனை முதலைமைச்சரிடம் சென்று மத்திய அமைச்சர் கூறிய திட்டங்கள், கருத்துக்கள் குறித்து ஆலோசிப்பேன்.

பரந்தூர் விமான நிலையம்
மூன்றாவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியாவை சந்தித்தேன். அவரிடம், ஏற்கனவே மதுரை விமான நிலையம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம். அதேபோல் பரந்தூர் விமான நிலைய பணிகளை விரைவுப்படுத்துவதாக மத்திய அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications