நீதிபதிகள் நியமனம்.. தேர்வுக்குழுவில் அரசின் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும்! மத்திய அரசு பரபர கடிதம்
டெல்லி: நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்.
பொதுவாக இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்ய கொலிஜியம் என்ற அமைப்பு உள்ளது. இந்த கொலிஜியம் செயல்படும் முறை என்பதில் நிறைய புதிர்கள் உள்ளன என்று பாஜக விமர்சனம் செய்து வருகிறது. இந்த கொலிஜியம்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதில் பரிந்துரைகளை செய்யும்.
பல வரையறைகளை வைத்து நீதிபதிகளை இந்த கொலிஜியம் தேர்வு செய்யும். இந்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மத்திய அரசின் வேலை. கொலிஜியம் செய்யும் பரிந்துரையை மத்திய அரசு எதிர்ப்பு இல்லாமல் ஏற்க வேண்டும்.

கொலிஜியம்
ஆனால் சமயங்களில் கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காமல் மீண்டும் பரிசீலனை செய்ய திருப்பி அனுப்பிய சம்பவங்கள் நடந்து உள்ளன. உதாரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப்பை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் கொலிஜியம் தொடர்ந்து பரிந்துரை செய்ததால் வேறு வழியின்றி மத்திய அரசு கொலிஜியம் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில்தான் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தொடர்ந்து கொலிஜியம் தேர்வு முறையை எதிர்த்து வருகிறார்.

எதிர்ப்பு
கொலிஜியம் தேர்வு முறை புதிராக உள்ளது. இதில் தேர்வுகள் மறைமுகமாக இல்லை. இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்ட கடிதம் இது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கமிஷன்
புதிதாக நீதித்துறை நியமனங்களை மேற்கொள்ள விதிகளை கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பாக அவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மத்திய பாஜக தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட பலர் நீதிபதி நியமனங்களை கடுமையாக எதிர்த்து உள்ளனர். இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதில் ஆளும் அரசின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் இந்த கொலிஜியம் முறையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்த முறையை ஒழிக்க முடியாது, இது அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அங்கம் என்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் வாதம் வைக்கிறது.

எதிர்ப்பு
ஆனால், இந்த கொலிஜியம் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஏலியன் போல தனியாக இது செயல்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்த அமைப்பிலும் தலையிடும் உரிமை அரசுக்கு இருக்க வேண்டும். தேசிய நீதித்துறை தேர்வு ஆணையத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது சட்டம் வழியாக 2014ல் உருவாக்கப்பட்ட ஆணையம். இந்த ஆணையத்தில் மத்திய அரசின் உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்த ஆணையத்தை கலைக்க கூடாது. இந்த கொலிஜியம் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. இதில் மத்திய அரசு உறுப்பினர்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும், என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தற்போது தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கேஎம் ஜோசப், எம்ஆர் ஷா, அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications