காய்ச்சல் + Pain Killer மாத்திரை - சிரப்புக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பின்னணியில் ‛நிமெசுலைட்’
டெல்லி: 100 மில்லி கிராமுக்கு மேல் உள்ள ‛நிமெசுலைட்' எனும் ‛பெயின் கில்லர்' மாத்திரை, மருந்துக்கு இந்தியாவில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலமாக உடல்நல பிரச்சனை வரும் என்பதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளில் ‛நிமெசுலைட்' மாத்திரை, மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெயின் கில்லராகவும், அழற்சி எதிர்ப்பு, காய்ச்சலை குணப்படுத்தும் வகையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‛நிமெசுலைட்' என்பது மாத்திரை, கேப்சூல் மற்றும் டானிக் (சிரப்) என 3 வகைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சமீபகாலமாக ‛நிமெசுலைட்' தயாரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‛நிமெசுலைட்' மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்ளும் மக்களுக்கு பிற உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து சில இடங்களில் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில் தான் தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது ‛நிமெசுலைட்'டின் அனைத்து வகை மாத்திரை, மருந்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு பிரிவு பரிந்துரை செய்தது.
இந்த மருந்து, மாத்திரையை எடுத்து கொள்வதால் இரைப்பை குடலில் ரத்தம் வடிதல், துளை ஏற்படுதல் உள்ளிட்ட பாதிப்புகள் முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்கொள்ளலாம் என்று கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தடை விதிக்க ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி நம் நாட்டில் 100 மில்லி கிராமுக்கு மேல் உள்ள நிமெசுலைட் மருந்து, மாத்திரைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
100 மில்லி கிராமுக்கு மேல் உள்ள நிமெசுலைட் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துவது உடல்நலனில் தீவிர பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛100 மில்லி கிராமுக்கு அதிகமாக இருக்கும் நிமெசுலைட் மாத்திரை, மருந்துகள் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்ற தகவலை ஏற்றுக்கொள்கிறோம். இதனால் அந்த மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக புதிய மருந்துகள் மார்க்கெட்டில் கிடைக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‛நிமெசுலைட்' மாத்திரை, மருந்துக்கு தடை விதிக்கப்படுவது இது முதல் முறையல்லை. இதற்கு முன்பு பல நாடுகள் தடை விதித்துள்ளன. கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் குற்றச்சாட்டில் இந்த மாத்திரைக்கு ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications