இனி பாகிஸ்தான் சீண்டினால் அவ்வளவுதான்.. புதிதாக களமிறங்கும் 97 தேஜஸ் போர் விமானங்கள்.. செம
டெல்லி: இந்திய விமானப்படைக்கு ரூ.62370 கோடிக்கு புதிதாக 97 தேஜஸ் மார்க் -1ஏ (Tejas Mark-1A)போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(எச்ஏஎல்) நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நிலையில் தேஜஸ் மார்க் -1ஏ போர் விமானத்தின் பின்னணி குறித்த சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விமானப்படையில் இருந்து நாளை மிக்-21 (MiG -21) போர் விமானங்களின் படைப்பிரிவுகள் ஓய்வு பெற உள்ளன. இதனால் புதிய போர் விானங்கள் விமானப்படைக்கு தேவையாக உள்ளன.

இந்நிலையில் தான் எச்ஏஎல் எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு துறை இன்று முக்கிய ஒப்பந்தம் செய்தது.
எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 97 தேஜஸ் மார்க் -1ஏ ரக போர் விமானங்களை வாங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.62,370 கோடியாகும். இதற்கான ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மற்றும் எச்ஏஎல் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி 68 விமானங்கள் ஒற்றை இருக்கை (Single Seat fighter jet) கொண்டதாக இருக்கும். 29 போர் விமானங்கள் இரு இருக்கை கொண்ட பயிற்சி போர் விமானங்களாக (Twin Seat Trainers) இருக்கும். இந்த விமானங்கள் 2027-2028 நிதியாண்டில் டெலிவரியை தொடங்கும். அதன்பிறகு 6 ஆண்டுகளில் முழுவதுமாக 97 தேஜஸ் போர் விமானங்களும் விமானப்படைக்கு கிடைத்து விடும்.
இந்த போர் விமானங்கள் உள்நாட்டு தயாரிப்பாகும். அதோடு விமானத்தின் உதிரி பாகங்களில் 67 சதவீதம் இந்தியாவில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. இந்த உதிரி பாகங்கள் 105 நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுக்கு 11,750 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது. புதிதாக UTTAM AESA radar, தி ஸ்வயம் ரக்சா கவாச் எலக்ட்ரானிக் வார்பேர் சூட் மற்றும் indigenously developed control surface actuators இடம்பெற உள்ளது.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டில் 83 தேஜஸ் எம்கே 1ஏ போர் விமானங்கள் வாங்க கையெழுத்தானது. ஆனால் இந்த விமானங்கள் டெலிவரியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களில் தாமதம் கூடாது என்று மத்திய அரசு உறுதியாக எச்ஏஎல் நிறுவனத்திடம் கூறியுள்ளது.
தற்போது நம் நாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து சீண்டி வருகிறது. மேலும் பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. இது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. மேலம் நம் நாட்டின் விமானப்படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் ஓய்வு பெற உள்ளன. இப்படியான சூழலில் இந்த ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதோடு பாகிஸ்தான் நம்மை சீண்டினால் உரிய முறையில் தக்க பதிலடியை கொடுக்க இந்த விமானங்கள் கைக்கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications