அஜெண்டாவே தெரியாது.. ஆடலாம் வாங்க! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்- செப்.17-ல் அனைத்து கட்சி கூட்டம்!
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடங்கும் நிலையில் டெல்லியில் செப்டம்பர் 17-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற வேண்டும்.

ஆனால் திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 18-ந் தேதி முதல் செப்டம்பர் 22-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் சர்ச்சையானது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் பொது சிவில் மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என அதி முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி உள்ளன. மேலும் நாட்டின் பெயரையே பாரதம் என மாற்றும் தீர்மானத்தை கூட மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் எதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுகிறது? என்கிற நிகழ்ச்சி நிரல்- அஜெண்டாவை கேட்டுக் கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள். ஏனெனில் பணமதிப்பிழப்பு, கொரோனா பாதிப்பு, சீனா ஆக்கிரமிப்பு, மணிப்பூர் வன்முறை என எந்த ஒரு முக்கியமான விவகாரங்களிலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படாத நிலையில் இப்போது திடீரென கூட்டப்படுகிறது? என்பதும் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருந்து வருகிறது. மத்திய அரசோ, 5 அமர்வுகளாக மட்டுமே கூட்டத் தொடர் நடைபெறும் என்கிற பதிலுடன் நிற்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்குவதற்கு முந்தைய நாள் அதாவது செப்டம்பர் 17-ந் தேதி டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்குமா? அல்லது எதிர்ப்பை இங்கே இருந்தே தொடங்குமா? என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்.
-
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு!












Click it and Unblock the Notifications