தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் ஏன் குறைவு? வைகோ கேள்விக்கு மத்திய அரசு சொன்ன பதில் இது!
டெல்லி: தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில்களை ஏன் அதிக அளவு இயக்கவில்லை என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
ராஜ்யசபாவில் இது தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விகள்: இந்திய ரயில்வே மேலும் சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் யாவை? அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை எவ்வளவு? வணிக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளால் தேவை அதிகமாக இருக்கும் நாட்டின் தெற்குப் பகுதியில் அதிகமான வந்தே பாரத் ரயில்களை இயக்காததற்கான காரணங்கள் என்ன? தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற ரயில்களை இயக்க அரசு பரிசீலிக்குமா?

வைகோவின் கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: 2023 ஜூலை மாதத்தில், 22549/22550 கோரக்பூர் - லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 12461/12462 ஜோத்பூர் சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 25 ஜோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் இந்திய இரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை அறிமுகப்படுத்துவது, இந்திய இரயில்வேயில் செயல்பாட்டு சாத்தியக்கூறுகள், போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் இரயில் பெட்டிகள் கிடைப்பது ஆகியவற்றுக்கு உட்பட்டது. இந்திய இரயில்வே, மாநிலம்/பிராந்திய வாரியாக ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தவில்லை, ஏனெனில் ரயில்வே நெட்வொர்க் மாநிலம்/பிராந்திய எல்லைகளை கடந்து செல்கிறது. இருப்பினும், 20643/20644 எம்ஜிஆர் சென்னை கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 20607/20608 சென்னை - மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ள நகரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
20833/20834 விசாகப்பட்டினம்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், 20701/20702 செகந்திராபாத்-திருப்பதி எக்ஸ்பிரஸ், 20633/20634 காசர்கோடு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மற்றும் 20661/20662 கே.எஸ்.ஆர் பெங்களூரு-தார்வார் எக்ஸ்பிரஸ் போன்றவை என நாட்டின் தெற்குப் பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications