மணிப்பூர் ஆட்சி டிஸ்மிஸ்? பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா தீவிர ஆலோசனை- இன்று முக்கிய அறிவிப்பு?
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் முதல்வர் பைரேன்சிங் ராஜினாமா, பிரதமர் மோடி விளக்கம் உள்ளிட்டவை தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக இன்று முக்கிய முடிவை பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்துக்குப் பின் அறிவிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
மணிப்பூர் விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியாக உருவெடுத்திருக்கிறது. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் என கூறி இருக்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று பாஜக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் நேற்று இரவு தீவிர ஆலோசனை நடத்தினர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இத்தகைய அடுத்தடுத்த சந்திப்புகள், இன்றைய பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம் ஆகியவை மணிப்பூர் விவகாரத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்படலாம் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
மணிப்பூரில் குக்கி - மைத்தேயி இனக்குழு இடையேதான் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதன்விளைவாக குக்கி இனமக்கள், தனி நிர்வாக கவுன்சிலை கோரி வருகின்றனர். இதனை மிசோரம் மாநில அரசும் ஆதரித்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் ஆளும் எம்.என்.எப்., பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. மிசோரம் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு குக்கி தன்னாட்சி கவுன்சில் தொடர்பாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications