"இந்தியா" அணியின் "அரசியல் சாசனம்" போராட்டத்துக்கு மோடி பதிலடி- ராஜ்யசபாவில் அதிரடி அறிவிப்பு!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக 'அரசியல் சாசன' புத்தகத்துடன் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பதவியேற்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "75-வது ஆண்டில் நுழையும் அரசியல் சாசனத்தை நாடு முழுவதும் மக்கள் விழாவாகக் கொண்டாடுவோம்" என்பதுதான் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு.
லோக்சபா தேர்தலின் போது அரசியல் சாசனத்தை முன்வைத்து கடுமையான பிரசாரங்கள் நடைபெற்றன. 400-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றினால் அரசியல் சாசனத்தைத் திருத்துவோம் என பாஜக தலைவர்கள் பேசினர். இதையே தேர்தல் பிரசாரமாக ஆயுதமாக கையிலெடுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள், அரசியல் சாசனம் திருத்தப்பட்டால் இடஒதுக்கீடு பறிபோகும் என்றனர். இந்த பிரசாரம் பாஜகவுக்கு நெருக்கடியையும் கொடுத்தது.

லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் பதவியேற்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையடக்க அரசியல் சாசனப் புத்தகத்தை கையில் ஏந்தியபடியே உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அரசியல் சாசனத்தையே அரசியல் ஆயுதமாக இந்தியா கூட்டணி பயன்படுத்துவதற்கு ராஜ்யசபாவில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுத்தார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்திய நாடாளுமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்வது சிறப்பான, மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள். அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனத்தைப் புகழ்ந்த திரு மோடி, இந்திய அரசியலில் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சாராதவர்கள் நாட்டுக்குத் தொண்டாற்ற வாய்ப்பைப் பெறுவது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளால் தான். நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்தபோது எதிர்த்தனர். 75-வது ஆண்டில் நுழையும் அரசியல் சாசனத்தை நாடு முழுவதும் மக்கள் விழாவாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அரசியல் சாசனத்தின் எழுச்சியையும், நோக்கத்தையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கொண்டு சென்று அது பற்றி தெரிந்து கொள்வதை உறுதி செய்ய இருக்கிறோம் என்றார்.
மேலும் கட்டுரைப் போட்டிகள், விவாதங்கள், உரைகள் போன்ற போட்டிகளில் நமது மாணவர்களிடையே ஏற்பாடு செய்வதன் மூலம் அரசியல் சாசனத்தின் பல்வேறு முகங்கள் பற்றிய புரிந்துணர்வையும் நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications