சிஏஏ சட்ட விதிகளை வகுக்கும் பணி தீவிரம்.. மீண்டும் காலஅவகாசம் கோரிய மத்திய உள்துறை அமைச்சகம்
டெல்லி: சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்தியாவில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019 டிசம்பர் மாதம் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதே ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் சட்டமானது. இந்த சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்தியாவின் அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும். இவர்கள் அந்த நாடுகளில் இருந்து இந்தியா வந்த பிறகு 6 ஆண்டுகளில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
இதில் முஸ்லிம் மக்கள் பற்றி எந்த விபரமும் இடம்பெறவில்லை. இதனால் சிஏஏ சட்டம் என்பது சர்ச்சையை கிளப்பியது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் 80க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.

இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதற்கிடையே தான் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விதிகளை வகுத்து வருகிறது. இந்த விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வகுக்கிறது. இந்த விதிகளை வகுக்க 7 முறை தொடர்ந்து காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் விதிகளை வகுப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 8 வது முறையாக காலஅவகாசத்தை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாடாளுமன்ற லோக்சபா துணை சட்ட குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 8 வது முறையாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகளை வகுக்க காலஅவகாசம் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications