ஹேக் செய்யப்பட்ட மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் அக்கவுண்ட்!
டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் @MIB_India இன்று காலை மர்ம நபர்களால் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பின்னர் இந்த ட்விட்டர் அக்கவுண்ட் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் @MIB_India திடீரென ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் இந்த அக்கவுண்ட் பெயரை Elon Musk என மாற்றியதுடன் great job எனவும் ட்வீட் செய்திருந்தனர்.

மத்திய அரசின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே ட்விட்டர் அக்கவுண்ட்டை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மீட்டது. இதன் பின்னர் வழக்கமான பதிவுகள் இந்த பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. அப்போது இந்தியா பிட்காயினை அங்கீகரித்துவிட்டதாக போலியான பதிவையும் ஹேக்கர்கள் பதிவிட்டிருந்தனர். இது மிகப் பெரும் சர்ச்சையானது.
கடந்த 3-ந் தேதியன்று Indian Council of World Affairs, Indian Medical Association, Mann Deshi Mahila Bank ஆகியவற்றின் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளும் ஹேக் செய்யப்பட்டு Elon Musk என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இந்த அக்கவுண்ட்கள் மீட்கப்பட்டன. இருந்தபோதும் ஹேக்கர்களின் சில பதிவுகள் நீக்கப்பட முடியாமல் இருந்தது.
மத்திய அரசின் துறைகள் மற்றும் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை குறிவைத்து வருகின்றனர் ஹேக்கர்கள். டிஜிட்டல் மயமாக்கம் என்பதை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஹேக்கர்கள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருவது பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தி வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications