முழு உடல் பரிசோதனை முடிந்தது.. எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்!
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின் அமித் ஷா ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்தார். கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அதன்பின் மீண்டும் கொரோனாவிற்கு பின்பான சிகிச்சை பெற அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சு விடுவதில் சிரமம் இருந்த நிலையில் மீண்டும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து 18 நாட்கள் கொரோனாவிற்கு பின்பான சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆகஸ்ட் 18ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் இவருக்கு மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம் நிலவியது.
இதனால் கடந்த வாரம் அமித் ஷா மீண்டும் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். முழு உடல் பரிசோதனைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முழுமையான உடல் பரிசோதனை முடிந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications