Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 கி.மீ வேகத்தில் செல்லும்! ஹைப்பர்லூப் டியூப் வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்கால போக்குவரத்து அமைப்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக ஹைப்பர் லூப் டெக்னாலஜி பார்க்கப்படுகிறது. மணிக்கு 1,000- கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பு உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில்வேயுடன் இணைந்து சென்னை ஐஐடியும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தையூரில் உள்ள டிஸ்கவரி சாட்டிலைட் வளாகத்தில் அமைந்துள்ள ஹைப்பர்லூப் சோதனை வசதியை பார்வையிட்ட அஸ்வினி வைஷ்ணவ், அது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தொழில் நுட்பம் வளர வளர புதுப்புது கண்டுபிடிப்புகளும் பெருகி வருகின்றன. அந்த வகையில், விமானத்தை விட அதிவேகத்துடன் செல்லும் ரயில் போன்ற ஒரு போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நாடு கூறி வருகிறது. இதன் வேகம் மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகம் ஆகும்.

union-minister-ashwini-vaishnaw-shares-video-of-indias-hyperloop-tube

ஹைப்பர்லூப் தொழில் நுட்பம்

இதைவிட இரு மடங்குக்கு மேல் செல்லும் திறன் கொண்டதாக இந்த ஹைப்பர்லூப் உருவாக்கப்பட உள்ளது. குழாய் போன்ற கட்டமைப்பை உருவாக்கி குறைந்த காற்றழுத்தம் கொண்டதாக குழாய்க்குள் கேப்சூல் வடிவத்தில் உள்ள வாகனத்தில் பயணிகள் செல்லும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் பயணிகளின் போக்குவரத்து தேவையை இந்த ஹைப்பர்லூப் தொழில் நுட்பம்தான் தீர்த்து வைக்கும் என்று நம்பப்படுகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அரைமணி நேரத்திற்கும் சற்றேறக்குறைய நேரத்தில் செல்லும் அளவுக்கு இது அதி வேகத்தில் இயங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் சென்னை சென்னை ஐஐடி உதவியுடன் உருவாக்கப்படும் இது, ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைப்பர்லூப் சோதனை அமைப்பு ஆகும். இது 410 மீட்டர் நீளம் கொண்டது. ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான சோதனை அமைப்பு முழுவதும் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹைப்பர் லூப் எப்படி செயல்படுகிறது

ரயில்வே துறை நிதியுதவியுடன் சென்னை ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. தையூரில் உள்ள டிஸ்கவரி சாட்டிலைட் வளாகத்தில் அமைந்துள்ள ஹைப்பர்லூப் சோதனை வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அண்மையில் பார்வையிட்டார். அவருக்கு ஹைப்பர் லூப் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி செயல்முறை காட்டப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.

வீடியோவை பகிர்ந்த அமைச்சர்

இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஸ்வினி வைஷ்ணவ், "ஹைப்பர் லூப் டியூப் விரைவில் உலகிலேயே மிகவும் நீளமான ஒன்றாக இருக்கும்" என்று பதிவிட்டு உள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐஐடி மெட்ராஸில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான டியூடிஆர் ஹைப்பர்லூப், உலகின் முதல் வணிக ஹைப்பர்லூப் தொழில்நுட்ப அடிப்படையிலான திட்டம்(பிராஜக்ட்) அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல் ஆனது, 2047 ல் தற்சார்பு மற்றும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்திற்கான முக்கிய புள்ளியாக இருக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+