நடுவானில் விமானத்தில் மயங்கி விழுந்த பயணி.. சட்டென உதவிய மத்திய இணை அமைச்சர்.. நெகிழ்ச்சி சம்பவம்
டெல்லி: டெல்லியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
மத்திய நிதி இணை அமைச்சர் பாகவத் கராட் டெல்லியி இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தபோது இந்த நிகழ்வு நடந்துள்ளது. மத்திய இணை அமைச்சர் மருத்துவர் என்பதால் உடனடியாக பயணிக்கு முதலுதவி செய்து காப்பாற்றினார்.

பயணி மயக்கம்
கடந்த செவ்வாயன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பாகவத் கராட் தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற இன்டிகோ விமானத்தில் ஏராளமான பயணிகளும் சென்று கொண்டிருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு பயணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அந்தப் பயணிக்கு முதலுதவி அளிக்க விமானப் பணிப்பெண்களும், ஊழியர்களும் முன்வந்தனர்.

விமானத்தை திருப்பி விடலாமா?
ஆனால் திடீரென மயங்கி விழுந்த பயணிக்கு என்னவிதமான முதலுதவி தருவது என தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். ஒரு சிலர் அவருக்கு தேவைப்படுவது அவசர சிகிச்சையாகக் கூட இருக்கலாம் மீண்டும் விமானத்தை டெல்லிக்கே திருப்பச் சொல்லலாமா என ஆலோசனைக் கூறினர்.

பயணியை பரிசோதித்த அமைச்சர்
இதை அறிந்து மத்திய இணையமைச்சர் பாகவத் கராட் நேராக சென்று பயணியின் கையை பிடித்து நாடித்துடிப்பை பரிசோதித்தார். மேலும் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து ரத்த அழுத்த பிரச்சனையால்தான் அவர் மயக்க நிலைக்கு சென்றதாக கூறினார். பின்னர் அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் சிறிது நேரத்தில் அவர் கண்விழித்தார்.

சக பயணிகள் நிம்மதி
இதனால் சக பயணிகளும், விமான ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். பின்னர் தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும் அவசர நேரத்தில் உதவி அளித்த மத்திய இணையமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்தப் பயணி கண்ணீர் மல்க கூறினார். சக பயணிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கராட் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், விமான நிறுவனம் பாராட்டு
அமைச்சரின் இந்த செயலை தெரிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி டிவிட் செய்துள்ளார். "அமைச்சரின் இந்த செயல் எப்போதும் என் நினைவில் இருக்கும் " என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதேபோல இன்டிகோ விமான நிறுவனமும் அமைச்சரின்செயலுக்கு மனமார்ந்த நன்றியும் மனப்பூர்வமான பாராட்டுகளும் தெரிவிப்பதாகவும், அமைச்சரின் இந்த சேவை தங்களை ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications