வினேஷ் போகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம்! நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!
டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தம் விளையாட்டில் உலகின் முன்னணி வீராங்கனைகளை தோற்கடித்த இந்திய விராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேற்றியிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைத்திருக்கும்.

இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் அவர் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எடை குறைப்புக்காக வினேஷ் நேற்றிரவு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு பலனாக 1.85 கிலோ எடை குறைந்திருக்கிறது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட எடையை விட 150 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது. அதேபோல வினேஷ் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம்.. வெற்றியை சகிக்க முடியாதவர்களின் சதி இது! காங்கிரஸ் விமர்சனம்
“வினேஷ் போகத் வெற்றியை யாரால் ஜீரணிக்க முடியாதோ அவர்கள்தான் சதி செய்திருப்பார்கள்” என காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறுகையில்,
“இதுவரை நடந்த போட்டிகளில் வினேஷின் வெற்றி மிகவும் வியக்கத்தக்கவகையில் இருந்தது. தைரியத்தை வெளிப்படுத்திய அவர், அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார். அவரின் தகுதி நீக்கம் எனக்கு வேதனையளிக்கிறது. அவரின் அனைத்து முயற்சிகளும், உழைப்பும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போனதுதான் எனக்கு வருத்தம்” என்று கூறியுள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்! “நீங்கள் இந்தியாவின் சாம்பியன்..” பிரதமர் மோடி ஆறுதல்!
அதேபோல "பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் ஒலிம்பிக்ஸை புறக்கணித்துவிட்டு ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் நாடு திரும்ப வேண்டும்" என்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். வினேஷ் தகுதி நீக்கத்திற்கு பயிற்சியாளர்கள்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கமளித்துள்ளார்.
அதில், “வினேஷ் போகத்துக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. வினேஷின் எடை 150 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரது பயிற்சிக்காக மத்திய அரசு ரூ.70.75 லட்சம் வழங்கியுள்ளது. தகுதி நீக்க விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத் தலைவரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தகுதி நீக்க விவகாரத்தில் அவருக்கு உதவ முடியுமா? என பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு பிரதமர் கேட்டார்” என்று கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications