‛‛வேணாமடா’’.. கேள்வி கேட்ட நிருபர்கள்! திரும்பாமல் தெறித்து ஓடிய மத்திய பெண் அமைச்சர்.. ஒரே பரபரப்பு
டெல்லி: மல்யுத்த வீராங்கணைகள் போராட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட நிலையில் மத்திய பெண் அமைச்சர் திரும்பி கூட பாராமல் தெறித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகவும், பாஜக எம்பியாகவும் இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்பட 2 வழக்குகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்தாலும் கூட பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக்கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.
அதாவது கடந்த 28 ம் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நியாயம் கேட்டு மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு தரதரவென இழுத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பெரிய அளவில் சர்ச்சையானது.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், டெல்லி மகளிர் ஆணையம், உலக மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி நாட்டுக்காக வென்ற பதக்கங்களை அவர்கள் நேற்று கதறி அழுது கங்கை ஆற்றில் வீச முயன்றனர். இறுதியாக விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் பேசி அந்த போராட்டத்தை கைவிட வைத்தார்.
இதற்கிடையே தான் மல்யுத்த வீராங்கணைகளின் போராட்டம் குறித்து மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகியிடம் கேள்வி கேட்க நேற்று பத்திரிகையாளர்கள் முயன்றனர். அப்போது அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மீனாட்சி லேகி அவர்களிடம் இருந்து விலகி சென்றார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர். இந்த வேளையில் பதில் அளிக்காமல் அவர் ஓட்டம் பிடித்தார்.

பத்திரிகையாளர்களுக்கு பதில் சொல்லாமல் அவர் தனது கார் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடினார். அவருடன் பாதுகாவலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓடினர். இறுதியாக அவர் ‛சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறிவிட்டு வேகமாக காரில் ஏறி சென்றார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மீனாட்சி லேகி பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரைவயில் வெளியுறவுத்துறை மற்றும் கலாசார துறையின் இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர் டெல்லி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டு மத்திய இணையமைச்சராகி உள்ளார். முன்னதாக அவர் பாஜகவின் தேசிய மகளிரணி துணை தலைவியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications