‛மன்னிப்பு கேளுங்க கார்கே’... வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிதின் கட்கரி.. காங்கிரசுக்கு புதிய சிக்கல்
டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்ரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரபரப்பான நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் நிதின் கட்கரி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.

அந்த பேட்டியில் நிதின் கட்கரி கிராமங்களில் வளர்ச்சி என்பது இல்லை எனக்கூறி அவர் தனத கவலையை பகிர்ந்தார். அதேவேளையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராம மக்களையும் மேம்படுத்தும் முனைப்பில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனக்கூறினார்.
நிதின் கட்கரி பேசிய இந்த வீடியோ என்பது இணையதளங்களில் வெளியானது. மேலும் காங்கிரஸ் சார்பில் நிதின் கட்கரியின் வீடியோ பகிரப்பபட்டது. அதில் நிதின் கட்கரி கிராமங்களில் வளர்ச்சி இல்லை என்பது பற்றி பேசியது மட்டுமே இடம் பெற்றிருந்தது. அதாவது இன்றும் கூட கிராமங்கிளல் தொழிலாளர்கள், விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். கிராமங்களில் நல்ல சாலைகள், சுத்தமான குடிநீர் இல்லை என பேசியது மட்டும் இடம்பெற்றிருந்தது. மாறாக பிரதமர் மோடியின் அரசு கிராமங்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக நிதின் கட்கரி கூறிய விஷயங்கள் இடம்பெறவில்லை.
இதனால் நிதின் கட்கரியே பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதாக அந்த வீடியோ வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் நிதின் கட்கரி சார்பில் பாஜகவின் பொதுச்செயலாளரும், தகவல் தொடர்பு பிரிவின் தலைவராக உள்ள ஜெய்ராம் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நிதின் கட்கரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நிதின் கட்கரி சார்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
மார்ச் 1ம் தேதி நிதின் கட்கரி பேசிய பேச்சு குறித்த பதிவு வலைதளங்களில் பதிவியது. காங்கிரஸ் தலைவர்கள் வேண்டும் என்றே 19 வினாடிகளுக்கான வீடியோவை மட்டும் பகிர்ந்து மற்றவற்றை மறைத்துவிட்டனர். பொதுமக்கள் பார்வையில் இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நிதின் கட்கரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் இது பரபரபப்பட்டுள்ளது. அதோடு பாஜகவில் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி இதுவாகும்.
இதனால் வக்கீல் நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களில் மன்னிப்பு கோர வேண்டும். மேலும் அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தற்போது புதிய சிக்கலில் மாட்டி உள்ளனர்.
-
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications