தமிழக பாஜக உட்கட்சி மோதல் பற்றி அறிக்கை கேட்டேனா? பியூஷ் கோயல் என்ன சொன்னார் தெரியுமா?
டெல்லி: தமிழக பாஜகவின் உட்கட்சி மோதல் பற்றி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டிருப்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அத்தனை பாஜக தலைவர்களும் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

தமிழகத்தில் பாஜக தோல்வி தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த சில கருத்துகள் பெரும் சர்ச்சையானது. குறிப்பாக குற்றப் பின்னணி கொண்டவர்கள் பாஜகவில் சேர்க்கப்படுவது குறித்து விமர்சித்திருந்தார் தமிழிசை சவுந்தரராஜன். இதற்கு அண்ணாமலை தரப்பு பதில் தர தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் வெடித்தது.
இதனிடையே தமிழக பாஜக உட்கட்சி மோதல் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாகவும் ஊடக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் நேற்று காலை முதலே பாஜகவில் பரபரப்பு நிலவியது. இந்த பரபரப்புக்கு நடுவே ஆந்திரா விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தராஜனிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா கடுமையாக பேசும் வீடியோ பதிவுகள் வெளியாகி மிகப் பெரும் சர்ச்சையானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தலைவர் ஒருவரை பொதுமேடையில் அமித்ஷா எப்படி இழிவுபடுத்தலாம் என்றும் இதற்கு மேலும் தமிழிசை பாஜகவில் நீடிப்பதா? எனவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பதில் தரவும் தமிழிசை மறுத்திருந்தார்.
தற்போது, தமிழக பாஜகவின் உட்கட்சி மோதல் தொடர்பாக தாம் அறிக்கையே கேட்கவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்திருக்கிறார். அதாவது தாம் தமிழக பாஜகவுக்கு மேலிடப் பொறுப்பாளரே இல்லையே.. அரவிந்த் மேனன்தான் பொறுப்பாளர். அப்படி இருக்க நான் எப்படி தமிழக பாஜக உட்கட்சி மோதல் தொடர்பாக அறிக்கை கேட்க முடியும்? என மறுத்திருக்கிறாராம் பியூஷ் கோயல். அதேபோல லோக்சபா தேர்தலுக்கு முன்னரே தமிழக பாஜகவின் உட்கட்சி மோதல் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் டெல்லி மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பினார் எனவும் ஒரு தகவல் வலம் வருகிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications