பெரிய பிளான்.. மிக முக்கியமான "கூட்டுறவுத்துறை" இலாகாவை கையில் எடுத்த அமித் ஷா.. என்ன காரணம்?
டெல்லி: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுத்துறைக்கு அமைச்சராக அமித் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மத்திய அமைச்சரவையில் இன்று பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இன்றுக்கு 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர்.
இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து நேற்று கூட்டுறவுத்துறை என்ற புதிய மத்திய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூடுதலாக கவனிக்க உள்ளார்.

மத்திய ஒதுக்கீடு
கூட்டுறவுத்துறைக்கு இதுவரை மத்திய அமைச்சரவையில் இடமில்லை. ஏனென்றால் கூட்டுறவுத்துறை என்பது மாநிலங்களின் கீழ் வர கூடியது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த துறை கிடையாது. மாநிலங்கள் மட்டுமே தனியாக கவனிக்கும் துறைகளில் ஒன்றாக கூட்டுறவுத்துறை இருந்தது. தற்போது இதற்கு மத்திய அரசு புதிய துறையை உருவாக்கி உள்ளது.

நேரடி அமைச்சர்
அதிலும் இந்த துறைக்கு அமித் ஷா போன்ற வலுவான அமைச்சர் நேரடியாக அமைச்சர் ஆகியுள்ளார். இந்தியாவில் பல வளர்ந்த மாநிலங்களில் கூட்டுறவுத்துறை மூலம் அதிக நிதி வருவாய் கிடைக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் கூட்டுறவுத்துறை மிகுந்த வளர்ச்சி அடைந்து உள்ளது.

குறிக்கோள்
இந்த நிலையில் ஒருங்கிணைத்து கூட்டுறவுத்துறை வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமையை மத்திய அரசின் இந்த துறை பறிக்குமோ, அல்லது மாநில வருவாயை பங்குபோடும் திட்டமோ என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. வளர்ந்த மாநிலங்கள் கூட்டுறவுத்துறை மூலம் அதிக நிதி ஈட்டி வரும் நிலையில் மத்திய அரசு இதில் குதித்துள்ளது.

கட்டுப்பாடு
பல்வேறு மாநில துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது. சுகாதாரம் போன்ற மாநில துறைகளில் கூட நீட் தேர்வுகள் மூலமும், கொரோனா காரணமாகவும் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவுத்துறையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
-
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications