ஜம்மு காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் என்பது தற்காலிகம்தான்.. அமித் ஷா புதிய அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் யூனியன் பிரதேச அங்கீகாரம் என்பது தற்காலிகம்தான், என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் யூனியன் பிரதேச அங்கீகாரம் என்பது தற்காலிகம்தான், மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பின் அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதிரடி திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த் நிலையில் சிறப்பு அதிகார சட்டம் 370 நீக்கம் குறித்து தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்து வருகிறார். காலையில் இருந்து நடந்த விவாதங்களுக்கு அவர் விளக்கம் அளித்து வருகிறார்.

என்ன விளக்கம்
அமித் ஷா தனது பேச்சில், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு காரணமே 370-வது பிரிவுதான். எந்த மதத்தையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீடிப்பதால்தான் தீவிரவாதம் தொடருகிறது. ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை.370-வது பிரிவு பாதகங்களை செய்துவிட்டது.

3 குடும்பம்
370-வது பிரிவால் 3 குடும்பங்கள்தான் ஆதாயமடைந்தன. ஜம்மு காஷ்மீர் பெண்களுக்கு எதிரானது 370-வது பிரிவு.
370-வது பிரிவை ரத்து செய்வதால் தீவிரவாதம் ஒழியும். ஜம்மு காஷ்மீரில் ரத்தம் சிந்துவதை நிறுத்தவே 370-வது பிரிவு ரத்து. ஜம்மு காஷ்மீரில் சுகாதாரத்துறை படுமோசமாக உள்ளது.

மக்கள்
370-வது பிரிவு இருப்பதால் மருத்துவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்ல மறுக்கின்றனர். 370-வது பிரிவு இருப்பதால் தொழில் முதலீடுகள் ஜம்மு காஷ்மீருக்கு கிடைக்கவில்லை. மொத்தம் மூன்று குடும்பங்கள்தான் இங்கு எல்லா பலன்களையும் அனுபவித்து வந்தது. தற்போது அதை நீக்கி இருக்கிறோம்.

நிரந்தரம் இல்லை
காஷ்மீருக்கு தற்போது யூனியன் பிரதேச அந்தஸ்து என்பது தற்காலிகமானதுதான். மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். லடாக் எப்போதும் யூனியன் பிரதேசமாக இருக்கும். இது தற்காலிகம்தான், என்று அமித் ஷா குறிப்பிட்டு இருக்கிறார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications