பல்கலைகள் விரும்பினால் முதல், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் - சுப்ரீம் கோர்ட்
பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் புது உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
டெல்லி: கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை விரும்பினால் நடத்தலாம் என்று புது உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசின் அறிவிப்புக்கு மாணவர்கள் பேனர் வைத்து முதல்வரை வாழ்த்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும் ஒரேடியாக 20 அரியர் வைத்திருந்த மாணவர்களின் அரியர் கிளியர் செய்யப்பட்டதாலும் மாணவர்களின் கல்வித்தகுதி கேள்விக்குறியாகும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் அமைப்பினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மாணவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் ஆயத்தபணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் யுஜிசி தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலாம், இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications