பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் காசா கதிதான்.. சர்ச்சையை கிளப்பிய பரூக் அப்துல்லா பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுடன் மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் காசா கதிதான் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடங்காவிட்டால் காசா - பாலஸ்தீனம் கதிதான் நமக்கும் ஏற்படும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பரூக் அப்துல்லா கூறியதாவது:-

 unless dialogue begins with Pakistan we may meet the same fate as Gaza says Farooq Abdullah

நமது நண்பர்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், பக்கத்தில் இருப்பவர்களை மாற்ற முடியாது. அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருந்தால் இருநாடுகளும் வளர முடியும் என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கூறினார். போர் இப்போது ஒரு ஆப்ஷன் இல்லை என்றும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் கூறியிருக்கிறார். ஆனால் பேச்சுவார்த்தை எங்கே? பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் வர இருக்கிறார்.

காசா நிலைமை தான்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், நாம் பேச்சுவார்த்தைக்கு இன்னமும் தயாராகாமல் இருப்பதற்கான காரணம் என்ன? பேச்சுவார்த்தை மூலம் நாம் தீர்வு காணாவிட்டால் காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட அதே கதிதான் நமக்கும் ஏற்படும். காசா மீது இஸ்ரேல் தற்போது குண்டுகளை வீசி வருகிறது" என்றார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் அதிகரித்து வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல், பாரமுல்லாவில் உள்ள மசூதியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும் மூன்று பொதுமக்களும் கொல்லபப்ட்டனர். கடந்த ஒருவாரத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது.

பயங்கரவாதம் ஒழியவில்லை: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த சில வாரங்களில் அங்கு நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தான் பரூக் அப்துல்லா மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

முன்னதாக நேற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை நிலை திரும்பி விட்டது என்று சொல்வதால் மட்டும் அங்கும் பயங்கரவாதம் ஒழிந்து போகாது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு விட்டதால் பயங்கரவாதம் ஒழிந்து விட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பயங்கரவாதம் ஒழியவில்லை. இந்த பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் வரை பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+