அன்லாக் 2.. நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுக்க லாக்டவுன் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கடந்த ஜூன் 8ம் தேதியில் இருந்து மூன்று கட்டமாக தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அன்லாக் 2

அன்லாக் 2

இதை அன்லாக் 1, 2, 3 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்லாக் 1 முடிந்துள்ள நிலையில் தற்போது அன்லாக் 2 அமலுக்கு வந்துள்ளது. அன்லாக் 2வின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் லாக்டவுன் தளர்வுகள் அமலுக்கு வரும். இதன் மூலம் நாடு முழுக்க புதிய தளர்வுகள் அமலுக்கு வருகிறது. ஜூலை 31 வரை அன்லாக் 2 விதிகள் அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தடை தொடரும் சேவைகள்:

தடை தொடரும் சேவைகள்:

  • ஜூலை 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை.
  • மத்திய மற்றும் மாநில அரசின் பயிற்சி மையங்கள் வரும் ஜூலை 15ம் தேதியில் இருந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
  • மெட்ரோ ரயில்கள் இயங்காது.
  • மத்திய அரசு அனுமதித்ததை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும்.
  • சினிமா ஹால்கள், ஜிம்னாசிசம்ஸ், நீச்சல்குளம், பார்க்குகள், தியேட்டர், பார்கள், ஆடிட்டோரியம், கூட்டம் நடக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
கூட்டங்களுக்கு தடை

கூட்டங்களுக்கு தடை

  • அரசியல் கூட்டம், விளையாட்டுகள், விழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள், மதக்கூட்டங்களுக்கு தடை தொடரும்.
  • இரவு 10 மணி முதல் காலை 5 மணி பொதுமக்கள் வீட்டை வெளியே வர தடை.
  • 65வயதுக்கு மேல் உள்ளவர்களை, கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே வர தடை.
அனுமதிக்கப்பட்ட சேவைகள்

அனுமதிக்கப்பட்ட சேவைகள்

  • கட்டுப்பாட்டு பகுதிகளில் அடிப்படை விஷயங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
  • கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
  • மாநிலங்களில் இருக்கும் நிலவரங்களை பொறுத்து மாநில அரசுகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்.
  • இதுவரை அனுமதிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள், சிறப்பு விமானங்களுக்கு அனுமதி தொடரும்.
  • அலுவலகங்களில் ஆரோக்ய செயலியை பயன்படுத்துவது கட்டாயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+