பள்ளி, கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது.. ஜூலை 31 வரை கட்டுப்பாடுகள் தொடரும்.. மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Unlock 2.0: Schools and colleges wont be opened in second phase

கடந்த முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது, அன்லாக் செயல்பாடுகள் மூன்று கட்டமாக அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது. அதாவது அன்லாக் 1, 2, மற்றும் 3 என்று மூன்று கட்டமாக அன்லாக் செயல்பாடுகள் அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது.

அதன்படி இரண்டாம் கட்ட அன்லாக் திட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் திறக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே மட்டும் இந்த தளர்வு கொண்டு வரப்படும். மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்று அரசு கூறியது.

ஜூலை மாதத்தில் இப்படி கல்வி நிறுவனங்களை இயக்க தொடங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த முறை அன்லாக் 2ல் கல்வி நிறுவனங்களை திறக்கும் எண்ணத்தில் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளை மற்றும் பள்ளி கல்வி நிறுவனங்களை ஆலோசித்துவிட்டு இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், இப்போது கல்வி நிறுவனங்களை திறக்க இயலாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, பின் வரும் விஷயங்களுக்கு எப்போதும் போல தடை தொடரும்.

ஜூலை 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை. மத்திய மற்றும் மாநில அரசின் பயிற்சி மையங்கள் வரும் ஜூலை 15ம் தேதியில் இருந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி பொதுமக்கள் வீட்டை வெளியே வர தடை. 65வயதுக்கு மேல் உள்ளவர்களை, கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே வர தடை. மெட்ரோ ரயில்கள் இயங்காது. மத்திய அரசு அனுமதித்ததை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடரும்.

சினிமா ஹால்கள், ஜிம்னாசிசம்ஸ், நீச்சல்குளம், பார்க்குகள், தியேட்டர், பார்கள், ஆடிட்டோரியம், கூட்டம் நடக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும். அரசியல் கூட்டம், விளையாட்டுகள், விழாக்கள் , கலாச்சார நிகழ்வுகள், மதக்கூட்டங்களுக்கு தடை தொடரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+