மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. மத்திய அரசு வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வரும் 8ஆம் தேதி முதல் மால்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹோட்டல்களும் ரெஸ்டாரெண்டுகளும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
குழந்தை-யானை நட்பு..வைரலாகும் டிக்டாக் வீடியோ
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை பிறப்பித்த மத்திய அரசு ஐந்து கட்டங்களாக ஊரடங்கை நீட்டித்துள்ளது. எனினும் அன்லாக் 1 என்றபெயரில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் வரும் 8ம் தேதி முதல் ஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

வெப்பநிலை பரிசோதனை
- ஷாப்பிங் மால்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாராத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி;
- மால்களில் நுழைவு வாயில்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சானிடைசர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
- ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

தியேட்டருக்கு அனுமதி இல்லை
- கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
- சமூக தொலைதூர விதிமுறைகளை உறுதிப்படுத்த ஹோட்டல் நிர்வாகம் போதுமான ஆட்களை நியமிக்க வேண்டும்.
- ஷாப்பிங் மால்களில் தியேட்டர்களை திறக்க அனுமதி இல்லை

சமூக இடைவெளி
- உணவகத்தில் இருக்கைகளுக்கு இடையே போதுமான சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொருமுறையும் மாற்றம் செய்யப்படக் கூடிய மெனு கார்டுகளை பயன்படுத்த வேண்டும்.
- துணி நாப்கின்களுக்கு பதிலாக, நல்ல தரமான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத் தக்க காகித நாப்கின்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

உணவு விநியோகம்
- டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறைகளுக்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.
- சமூக தொலைதூர விதிமுறைகளை பின்பற்றும் வகையில்தான் பஃபே சேவை இருக்க வேண்டும்.
- உணவு விநியோக ஊழியர்கள் உணவு பொட்டலத்தை, விருந்தினர் அல்லது வாடிக்கையாளரின் அறை வாசலில் விட்டுவிட்டு வர வேண்டும். நேரடியாக பெறுநரிடம் ஒப்படைக்கக்கூடாது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications