உன்னாவ்.. வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் லெட்டரை ஏன் தரவில்லை.. விளக்கத்தால் ஷாக்கான தலைமை நீதிபதி
டெல்லி: உன்னாவில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் அளித்த புகார் கடிதத்தை ஏன் கொடுக்க தாமதம் ஆனது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளர் அதிகாரி இன்று தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம் பெண் கடந்த வருடம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பான வழக்காக மாறியுள்ளது. உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது குல்தீப் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

என்ன சொன்னார்
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில் கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதி உள்ளார். தனக்கு பாதுகாப்பு கோரியும் , இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியும் அவர் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.

ஆனால் இல்லை
ஆனால் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தரப்பில் இருந்தும் இதற்கு பதில் செல்லவில்லை. இது செய்திகளில் வெளியாகி பரபரப்பானது. இந்த நிலையில்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த கடிதம் என்னிடம் அளிக்கப்படவே இல்லை. ஏன் இதை என்னிடம் கொடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளர் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு இருந்தார்.

என்ன விளக்கம்
இன்று காலைக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கடந்த விசாரணையில் குறிப்பிட்டார். இன்று தனது விளக்கத்தை பதிவு செய்த, உச்ச நீதிமன்ற பொதுச்செயலாளர் அதிகாரி, ஜூலை மாதம் மட்டும் உச்ச நீதிமன்றத்திற்கு 6800 கடிதங்கள் வந்துள்ளது. அதில் வரிசைப்படியும், அவசரம் கருதியும் கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தெரியவே தெரியாது
நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடிதத்தை பார்த்து இருந்தால் கண்டிப்பாக கொடுத்து இருப்போம். ஆனால் அந்த கடிதத்தை நாங்கள் பார்க்கவில்லை. நிறைய கடிதம் வந்ததால் அதை பார்க்க முடியாமல் போனது. எங்களுக்கு அந்த பெண்ணின் பெயர், முகவரி தெரியாது. அதனால் கடிதத்தை அடையாளம் காண்பதும் கடினமாக இருந்தது, என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன கோபம்
இதை கேட்டு ஷாக்கான தலைமை நீதிபதி, எனக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த கடிதத்தை கூட நீதிமன்ற பொதுச் செயலாளர் அதிகாரி என்னிடம் கொடுக்கவில்லை. எனக்கு கடிதம் வந்தது என்பதையே நான் டீவி பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. என்ன கொடுமை இது, என்று குறிப்பிட்டார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications