பரபரப்பில் மேற்கு உ.பி: கைரானாவில் வீடு வீடாக பிரச்சாரம் நடத்துகிறார் அமித்ஷா.. விழிக்கும் அகிலேஷ்
மேற்கு உபியில் பாஜக பிரச்சாரத்தை துவங்கி உள்ளது
டெல்லி: உத்தரப் பிரதேச பாஜக தொண்டர்களின் மன உறுதியை உயர்த்தும் முயற்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமையன்று மேற்கு உ.பியின் கைரானா தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.. இதையடுத்து உத்தரபிரதேச தேர்தலில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.
Recommended Video
உத்தரப்பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்தும் வருகின்றன.
இதனிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகிய நிலையில், அனைத்திலும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.

உத்தரபிரதேசம்
குறிப்பாக அவாத், புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல் மற்றும் மேற்கு உ.பி., ஆகிய அனைத்து பகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.. அதாவது, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்றே பெரும்பாலான கணிப்புகளின் முடிவுகளாக இருக்கிறது.. இதுவரை வெளியாகி முடிந்துள்ள கணிப்புகளில், பாஜக வெற்றி பெறும் இடங்களில் ஒன்றாக மேற்கு உபியும் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது..

கைரானா
அந்த வகையில், மேற்கு உபியை குறி வைத்து பாஜக தன்னுடைய அடுத்த ஆட்டத்தை துவங்கி உள்ளது.. குறிப்பாக கைரானா தொகுதியில் முழு வீச்சில் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.. இந்த கைரானா தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.. அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநிலத்தில், அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது..

ஆலோசனை
இதன் அடுத்தக்கட்டமாக ஷாம்லி மற்றும் பாக்த்தில் கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன்பிறகு, மீர்ட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சு நடத்துவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன..சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, உபியில் அமித்ஷா நடத்தும் முதல் அரசியல் நிகழ்ச்சி இதுவாகும் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.. மேலும் வாரணாசியில் பிரதமர் மோடி மேற்கொண்ட பிரச்சாரங்களும், நிர்வாகிகளை சந்தித்து பேசியதும், கூடுதல் பலத்தை பாஜகவுக்கு உபியில் பெற்று தந்துள்ளதாக கூறப்படுகிறது.

அகிலேஷ் யாதவ்
அதேபோல, பாஜக தலைவர் ஜேபி நட்டா, முதல்கட்ட வாக்கு பதிவுக்கு முன்னதாக இதே மேற்கு உபிகயில் உள் அம்ரோஹா, பிஜ்னோர் போன்ற மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய போகிறாராம்.. பிஜ்னோர், நாகினா போன்ற இடங்களில் அங்குள்ள நிர்வாகிகளடன் ஆசனை நடத்த உள்ளார்.. அதேபோல முதல்வர் யோகியும் தன்னுடைய பிரச்சாரத்தை துரிதப்படுத்தி உள்ளார்.. குறிப்பாக அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் நிறைந்த பகுதிகளை குறி வைத்து பிரச்சாரங்கள் நடக்க போவதாக கூறப்படுகிறது. அதேபோல கொரோனா தயாரிப்பு குறித்து தீன்தயாள் மருத்துவமனையில் ஆய்வு செய்வார் என்றும், இதையடுத்து பாஜக நிர்வாகிகளுடன் யோகி ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

சஹாரன்பூர்
சஹாரன்பூர் மற்றும் புலந்த்ஷாஹருக்கு யோகி வருகை தர உள்ளார்.. 4 நாட்களுக்கு முன்பு, கொரோனா ஆய்வு பணிகளை பார்வையிட காசியாபாத் வந்திருந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.. இதனிடையே பாஜக மூத்த தலைவர் ஜேபி நட்டா, ஆக்ராவின் பிரஜ் மாகாணத்தில் உள்ள 40 தொகுதிகளின் அலுவலகப் பொறுப்பாளர்களுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

நட்டா பிரச்சாரம்
அப்போது மிக முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர்களுடன் விவாதித்தார்... ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மதுரா பிரோசாபாத் ஆகிய இடங்களில் உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் செயல்பாட்டாளர்களுடனும், அலிகார், ஹத்ராஸ், ஈட்டா மற்றும் மெயின்புரி ஆகிய 20 தொகுதிகளின் பொறுப்பாளர்களுடனும் அவர் இதுவரை 2 சுற்று சந்திப்புகளை நடத்தி முடித்துள்ளார்.. ஆக மொத்தம் பாஜக தலைவர்கள் அமித்ஷா, யோகி, ஜேபி நட்டா தலைமையில் மேற்கு உபியில் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

பாஜக தலைவர்கள்
இதனிடையே மேலும் சில தகவல்கள் கூறப்படுகிறது.. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அச்சுறுத்தல்களால் ஏராளமான இந்துக்கள் அந்த பகுதியிலிருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியதால்தான் அமித்ஷா, இந்த கைரானாவைத் தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது..

இஸ்லாமியர் ஆதரவு
மேற்கு உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை, இஸ்லாமிய சமூகத்தின் ஆதரவானது, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிகமாகவே உள்ளது... கடந்த 2013ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கும், ஜாட்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரத்துக்கு பிறகு கணிசமான இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினர் என்றாலும், அகிலேஷ் யாதவ்வுக்கான ஆதரவு உபி முழுக்க பெருகி வருவதும் பாஜகவுக்கு சற்று எரிச்சலையே ஏற்படுத்தி உள்ளது..

பின்னடைவு
இதுபோக, பாஜகவில் இருந்த 3 சீனியர்கள் விலகி, அகிலேஷ் கட்சியில் சேர்ந்தது பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.. ஓபிசி தலைவர்கள் இப்படி அணிமாறி கொண்டிருக்கும் சூழலில், இப்போதைக்கு பாஜகவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால், அகிலேஷ் யாதவ் சகோதரி அபர்ணா பாஜகவில் சேர்ந்துள்ளது மட்டுமே.. எனினும் சமாஜ்வாடியின் ஆதரவு நிறைய பெருகி வருவதால், பாஜக தலைவர்கள் உபியில் தீவிர பிரச்சாரத்தை அதிலும், வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை கையில் எடுக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது..!
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications