உ.பி. மகா கும்பமேளா: சாதுக்கள் புடை சூழ புனித நீராடிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah), உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். சாதுக்கள் புடைசூழ நின்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். அப்போது அமித்ஷா மீது புனித நீரை சாதுக்கள் தெளித்து ஆசீர்வதித்தனர்.

உ.பி. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டின் மகா கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளாவில் 76-வது குடியரசு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகா கும்பமேளாவின் கண்காட்சி பகுதி மற்றும் அகாராக்கள் இந்திய தேசியத்தின் வண்ணங்களில் திளைத்திருந்தன. துறவிகளின் அகாராக்கள், பக்தர்களின் முகாம்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளால் அமைக்கப்பட்டுள்ள நியாயவிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடியேற்ற விழாக்கள் நடைபெற்றன.

maha kumbh mela 2025 amit shah 2025

மகா கும்பமேளா நகரில் மூத்த குடிமக்கள் பங்கேற்றது குடியரசு தின விழாவிற்கு பெருமை சேர்த்தது. மேலும், மகா கும்பமேளாவின் கண்காட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை அரசு ஏற்பாடு செய்தது. இந்த முகாம்கள் மூத்த குடிமக்களுக்கான தங்குமிடங்களாக செயல்படுகின்றன. அவர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தரவும், சங்கமத்தில் புனித நீராடவும் இவை உதவிகரமாக உள்ளன.

இதனைத் தொடர்ந்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இன்று பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். சாதுக்கள் பலரும் புடைசூழ நின்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா புனித நீராடினர். அப்போது சாதுக்கள் அமித்ஷாவின் தலையில் புனித நீரை தெளித்து ஆசீர்வதித்தனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையை ஒட்டி மகா கும்பமேளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+