இந்தியாவில் விஷமாக மாறும் தாய்ப்பால்? மறைந்திருக்கும் "யுரேனியம்.." பச்சிளம் குழந்தைகளுக்கு ஆபத்து?
டெல்லி: குழந்தைகளுக்கு அம்மாக்கள் கொடுக்கும் தாய்ப் பாலில் ஆபத்தான யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த யுரேனியம் காரணமாகக் குழந்தைகளுக்குச் சிறுநீரக வளர்ச்சி, நரம்பியல் வளர்ச்சி பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை நாம் பார்க்கலாம்.
பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் முதல் உணவே தாய்ப்பால் தான். குழந்தைகளுக்கு முதல் சில மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே பிரதான உணவாக இருக்கும். அப்படி உன்னதமான தாய்ப்பாலில் ஆபத்தான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தாய்ப்பால்
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் (U238) இருப்பது தெரிய வந்துள்ளது.. இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் வழியாக யுரேனியம் பரவினால் அது குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் சர்மா கூறுகையில், "40 பெண்களிடம் இருந்து பெறப்பட்ட தாய்ப்பாலை ஆய்வு செய்தபோது அனைத்திலும் யுரேனியம் (U-238) இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சுமார் 70% குழந்தைகளுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம்.. அதேநேரம் ஒட்டுமொத்த யுரேனியம் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குக் கீழ் தான் இருக்கிறது. எனவே, புற்று நோய் பாதிப்பு ஏற்படாது.
நரம்பியல் பிரச்சனை
இருப்பினும், சில தீவிர பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்படலாம். குறிப்பாகப் பீகாரின் காக்காரியா மாவட்டத்தில் யூரேனியம் அதிக அளவில் இருக்கிறது" என்றார். இருப்பினும், மருத்துவர் அறிவுறுத்தாத வரை தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்றும் இதன் மூலமாகவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், "70% குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழியாக யுரேனியம் பாதிப்பு ஏற்பட்டு, இதனால் சில ஆபத்துகள் ஏற்படலாம். சிறுநீரக வளர்ச்சி, நரம்பியல் வளர்ச்சி பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும் யுரேனியம் குறைந்த அளவே இருப்பதால் உண்மையான பாதிப்பு குறைவாகவே இருக்கும். பெரும்பாலான யுரேனியம் அம்மாக்களின் உடல்களால் உறிஞ்சப்பட்டுவிடும். இதனால் தாய்ப்பாலில் அவை அதிகம் இல்லை" என்றார்.
நாடு முழுக்க ஆய்வுகள்
இப்போது இந்த ஆய்வு பீகாரில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. விரைவில் நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் இதன் மூலம் தாய்ப்பாலில் இதுபோன்ற ஆபத்தான விஷயங்கள் எந்தளவுக்கு இருக்கிறது என்பது கண்டறியப்படும் என்றும் டாக்டர் அசோக் தெரிவித்தார். தற்போதைய சூழலில் இந்த ஆய்வு முக்கியமாகத் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுரேனியம்
யுரேனியம் என்பது ஒரு கதிரியக்கம் கொண்ட உலோகம் ஆகும். பொதுவாக கிரானைட் உள்ளிட்ட பாறைகளில் இது காணப்படும். இது நிலத்தடி நீரில் கலந்து தண்ணீரை மாசுபடுத்தும். சுரங்கம் தோண்டுவது, நிலக்கரி வெட்டி எடுப்பது மற்றும் பாஸ்பேட் உரங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இது தண்ணீரை அதிகளவில் மாசுபடுத்துகிறது.
குடிக்கும் நீரில் லிட்டருக்கு 30 மைக்ரோகிராமிற்கு கீழ் யுரேனியம் இருக்கலாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குழந்தைகளின் உடலால் யுரேனியம் போன்ற கன உலோகங்களைச் சரியான முறையில் கையாள முடியாது. இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு அது ஆபத்தாகப் போகலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இது தொடர்பாக வரும் காலங்களில் மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications