ஏர் இந்தியாவில் கேட்ட அந்த சத்தம்.. அடுத்த நொடி இறக்கப்பட்ட RAT.. விபத்திற்கு காரணமே இதுதானாம்!
டெல்லி: அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தொடர்ச்சியாகப் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முன்னாள் அமெரிக்கக் கடற்படை விமானி கேப்டன் ஸ்டீவ் ஷீப்னர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் குஜராத்தில் இருந்து லண்டனுக்கு செல்லும்போது அது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார். இந்த விபத்து நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டீவ் ஷீப்னர்
இதற்கிடையே விபத்து தொடர்பாக முன்னாள் அமெரிக்கக் கடற்படை விமானி கேப்டன் ஸ்டீவ் ஷீப்னர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். விமான விபத்து குறித்த வீடியோக்களை ஆராய்ந்து அதற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்குபவர் ஸ்டீவ் ஷீப்னர். முன்பு வெளியான ஏர் இந்தியா விபத்து குறித்த வீடியோவை ஆய்வு செய்த அவர், விமானிகள் லேண்டிங் பிளாப்ஸை சரியாக செட் செய்யாதது கூட விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். அதோடு பறவை மோதல் அல்லது எரிபொருள் சிக்கல் போன்ற காரணங்களாலும் எஞ்சின் செயலிழந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ராம் ஏர் டர்பைன்
இதற்கிடையே ஏர் இந்தியா விபத்து குறித்த புதிய வீடியோவை ஆய்வு செய்த ஸ்டீவ் ஷீப்னர் வேறு தகவல்களைக் கூறியிருக்கிறார். இரட்டை எஞ்சின் பெய்லியர் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என அவர் குறிப்பிடுகிறார். விபத்து வீடியோவில் விமானத்தின் ராம் ஏர் டர்பைன் (RAT) இயக்கப்பட்டதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக ஷீப்னர் கூறுகிறார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த டர்பைன் இயக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் தரையில் இருந்து 625 அடி உயரம் வரை சென்ற நிலையில், அது விபத்தில் சிக்கியது. முன்பு, விமானிகள் லேண்டிங் பிளாப்ஸை சரியாக செட் செய்யாதது கூட விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஷீப்னர் கூறியிருந்தார். இந்த வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு ஸ்டீவ் முந்தைய கருத்தை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஆதாரம் இருக்கு
விமானம் விபத்துக்குள்ளாகும் முன் எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்து சில முக்கிய தகவல்களை ஷீப்னர் சுட்டிக்காட்டுகிறார். விமானத்தின் வலது பக்கத்தில் இறக்கைக்குச் சற்று பின்புறம் ராம் ஏர் டர்பைன் (RAT) பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தின் எலக்டிரிக் மற்றும் ஹைட்ராலிக் அமைப்புகள் செயலிழந்தாலோ அல்லது இரட்டை எஞ்சின் செயலிழப்பு ஏற்பட்டாலோ, விமானத்தின் முக்கியமான சிஸ்டங்களுக்கு பவர் கொடுப்பதற்காக இது பயன்படுத்தப்படும்.
இது குறித்து ஷீப்னர் கூறுகையில், "விமானத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறிய சாம்பல் நிறப் புள்ளி தெரியும். அது திரையில் உள்ள ஏதோ புள்ளி போலத் தோன்றலாம். ஆனால் அதுதான் ராம் ஏர் டர்பைன் (RAT). RAT இயக்கப்பட்டதை இது உறுதிப்படுத்துகிறது.. விபத்துக்குச் சற்று முன்பு ஒருவிதமான சத்தம் கேட்டது. அது RAT ஏற்படுத்தும் ஒலி. 400 அல்லது 500 அடி உயரத்தில் இருக்கும்போது விமானம் தனது சக்தியை இழந்தால், இந்த டர்பைன் எந்தப் பயனும் தராது. ஏனெனில் அந்த உயரத்தில் எஞ்சினை மீண்டும் ஸ்டார்ட் செய்ய போதுமான நேரம் இருக்காது" என்றார்.
பலத்த சத்தம்
முன்னதாக இந்த விபத்தில் உயிர் பிழைத்த பயணியும் கூட, விமானம் புறப்பட்ட சில நொடிகளில் "பலத்த சத்தம்" கேட்டதாகவும், கேபின் விளக்குகள் எரிந்ததாகவும் கூறினார். இது RAT இயங்கும் போது நடக்கும் நிகழ்வுகளுடன் ஒத்துப்போவதாக ஷீப்னர் தெரிவித்தார்.
அதேநேரம் விமானம் புறப்பட்ட உடனேயே எஞ்சின்கள் செயலிழந்ததற்கான உண்மையான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், மே டே அழைப்புக்கான உண்மையான காரணம் இரட்டை எஞ்சின் செயலிழப்பா என்பதை ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் ஆடியோ மூலம் கண்டறிய முடியும் என்று அவர் கூறுகிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications