வெனிசுலா அதிபர் கைது.. இந்தியாவுக்கு இப்படி ஒரு நெருக்கடியா! டிரம்ப் சும்மாவே இருக்கமாட்டாரா!
டெல்லி: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் இந்தியா அமைதி காத்து வருகிறது. ஏன் இந்தியா வெளிப்படையாக பேசவில்லை? மௌனம் காப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ தலைமையில் கம்யூனிச ஆட்சி நடைபெற்று வந்தது. அமெரிக்காவும்-கம்யூனிச கொள்கையும் பாம்பும் கீரியும் போல. ஒன்றுக்கு ஒன்று செட் ஆகாது. இப்படி இருக்கையில் அமெரிக்காவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு வெனிசுலா தொடர்ந்து தனது கண்டனத்தை பதிவு செய்தது வந்திருந்தது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை
இதையெல்லாம் உற்று கவனித்து வந்த அமெரிக்கா, வெனிசுலாவில் நிலவும் சில உள்நாட்டு பிரச்சனைகளை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, அதிபர் நிக்கோலஸை உள்ளே புகுந்து கைது செய்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த அராஜக நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், இந்தியா இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. மதுரோவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேநேரம், வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மட்டும் அறிவுறுத்தியுள்ளது.
விதி அடிப்படையிலான ஒழுங்கு
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணங்கள் இருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியா எப்போது 'விதி அடிப்படையிலான ஒழுங்கை' கடைபிடிக்கிறது. அதாவது, உலக நாடுகள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைதான் இந்த விதிகள் குறிப்பிடுகின்றன. வலிமையான நாடுகள் சொல்வதை உலகம் கேட்பது என்பதற்கு பதில், பெரிய நாடோ, சிறிய நாடோ, சட்டம் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பதே விதி அடிப்படையிலான ஒழுங்கு.
மௌனம் காக்கும் இந்தியா
ஒரு நாடு, மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைய கூடாது. ஐநா வகுத்துள்ள மனித உரிமைகள், கடல்சார் சட்டங்களை மதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. ராணுவ பலத்தை பயன்படுத்தி, இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதையோ, ஆட்சியை கலைப்பதையோ இந்தியா கடுமையாக எதிர்க்கிறது.
இப்படியெல்லாம் இந்தியா தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தாலும், அமெரிக்கா விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டி உள்ளது. ஏனெனில் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்கா போட்ட 50% வரி தற்போது வரை நீக்கப்படவில்லை. இப்படி இருக்கையில் வெனிசுலா விஷயத்தில் வாய் விட்டால் நிச்சயம் அமெரிக்காவின் எதிர்வினை கடுமையாக இருக்கும். எனவேதான் இந்தியா அமைதி காத்து வருகிறது.
இந்தியா-வெனிசுலா உறவு
இந்தியாவுக்கும் வெனிசுலாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் உறவு இல்லை. ஆனால், 2019-2020 காலத்தில் சுமார் 6,000 மில்லியன் அளவுக்கு வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நாம் செய்திருந்தோம். வழக்கம்போல குறுக்கே இந்த கவுசிக் வந்தா? என்பதை போல உள்ளே புகுந்த அமெரிக்கா, எண்ணெய் வாங்க கூடாது என்று தடை போட்டுவிட்டது.
அரசியல் உறவுகளை பொறுத்தவரை, கடந்த 2005ல் அப்போதைய வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் இந்தியா வந்தார். அதன் பின்னர் 2012ல் நிக்கோலஸ் மதுரோ வந்திருந்தார்.
அமெரிக்க விவகாரத்தில் இந்தியா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், தென் கொரியா போன்ற ஜி20 நாடுகளும் சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கின்றன. எனவே, பாயிண்ட் வரட்டும் என்று இந்தியா காத்திருக்கிறது.
-
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications