Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

H1B Visa: இந்தியர்கள் வயிற்றில் அடித்த அமெரிக்கா.. தாமதமான ஹெச்-1பி! கவலை தெரிவித்த இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவில் வேலை செய்ய தேவையான ஹெச்-1பி விசாவுக்கு இந்தியாவில் இருந்து விண்ணப்பித்த பலரின் நேர்காணல்கள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டு வரும் சிரமங்களை குறித்து அமெரிக்க அரசிடம் எடுத்துரைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், வங்கதேச விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் சிலரின் நேர்காணல்கள் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் நடைபெற இருந்தன. ஆனால், அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் திடீரென மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி, அந்த நேர்காணல்களை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு மாற்றி வைத்துள்ளனர்.

இதனால் விண்ணப்பதாரர்கள் குழப்பத்திலும் சிரமத்திலும் உள்ளனர். விண்ணப்பித்தவர்களின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் இணையத்தில் உள்ள அவர்களின் சுயவிவரங்கள் போன்ற தகவல்களை மேலும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

US H1B Visa India

அமெரிக்க விசா

குறிப்பாக, அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்துகள், வன்முறையைக் குறிக்கும் பதிவுகள் அல்லது பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பதிவுகள் இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் சரிபார்த்து வருகிறார்கள். மேலும், விசா விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களும், இணையத்தில் உள்ள தனிப்பட்ட விவரங்களும் ஒன்றே தானா என்பதையும் பரிசோதித்து வருகின்றனர்.

ஹெச்1பி விசா தாமதம்

முன்பு இந்த ஆய்வு நடைமுறைகள் மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது அது ஹெச்-1பி விசா விண்ணப்பங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் விசா வேண்டி விண்ணப்பித்திருந்த பலர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையைப் பற்றி புது டெல்லியில் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர்," விசா தொடர்பான விஷயங்கள் ஒவ்வொரு நாட்டின் அதிகாரத்துடனும் (இறையாண்மையுடனும்) தொடர்புடையவை. அதே சமயம், நேர்காணல் ஒத்திவைப்பால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது என்றார்.

விசா நேர்காணல் ஒத்திவைப்பு

அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த சிலர், இந்தியா திரும்பியபோது மீண்டும் செல்ல விசா பெற வேண்டிய சூழல் உருவானது. ஆனால் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டதால் அவர்கள் இந்தியாவில் கூடுதல் காலம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை, குடும்பம், பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை குறைக்க இந்தியா தொடர்ச்சியாக அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

வங்கதேச சிறுபான்மை வன்முறை

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் குறித்தும் இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் தீபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. அந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ரந்தீர் ஜெய்ஸ்வால்

இதுதொடர்பாக பேசிய ஜெய்ஸ்வால் கூறுகையில், வங்கதேசத்தில் ஹிந்து, கிறிஸ்துவர், பெளத்தர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ச்சியான வன்முறை நடைபெறுகிறது. இடைக்கால ஆட்சி தொடங்கிய பிறகு 2,900-க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதை சாதாரண நிகழ்வாகக் கருத முடியாது என்றார். இதனிடையே, வங்கதேசத்தில் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவைப்பட்டால் நாடு தழுவிய முழு அடைப்பும் நடத்தப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+