ட்விட்டரில் டிரம்ப் ஷேர் செய்த பாகுபலி வீடியோ... அவங்க இருப்பதை கவனிக்கலை போல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப், பாகுபலி பட காட்சிகளில் தம்மை மார்பிங் செய்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    அமெரிக்கா அதிபர் டிரம்ப் நாளை முதல் இந்தியாவில் 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். டிரம்ப்பின் இந்திய பயணம் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்? முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா? என விவாதிக்கப்பட்டு வருகிறது.

    US President Donald Trump shares morphed Baahubali video of himself ahead of visit

    அதேநேரத்தில் இந்த பயணத்தால் அமெரிக்கா தான் பொருளாதார ஆதாயம் அடையும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் கூறி வருகின்றனர். இந்நிலையில் டிரம்ப்பின் இந்திய வருகையை முன்வைத்து மீம்ஸ்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் களைகட்டி வருகின்றன.

    இதில் பாகுபலி படத்தில் வரும் போர் காட்சிகளில் டிரம்ப்பின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட வீடியோவும் ஒன்று. இந்த வீடியோவை ரசித்திருக்கும் டிரம்ப், தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

    ஆனால் இதற்கும் அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அமெரிக்காவின் மதிப்பை சீர்குலைக்கும் செயலில் டிரம்ப் இறங்கியிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

    இதேவீடியோவில் கடைசியில் பிரதமர் மோடியின் பிரிந்து சென்ற மனைவி ஜசோதாபென் முகத்தையும் குறும்புக்காரர்கள் கோர்த்துவிட்டிருக்கின்றனர். இதை டிரம்ப் கவனிக்கலைபோல!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+