பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கு அழைப்பு?
டெல்லி: பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 30ந் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவி ஏற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட இருக்கின்றன. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பி-5 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட இங்கிலாந்து, பிரான்ஸ் அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாம்.
இதுதவிர்த்து, ஜப்பான், இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் சார்க் கூட்டமைப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பின்னர், அடுத்த சில நாட்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.
பதவி விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உலக அரங்கில் தன்னை வலுவான தலைவராக முன்னிறுத்தவும், பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பாகவும் பிரதமர் மோடி கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications