உத்தர பிரதேசம்: 7 கட்டமாக தேர்தல்.. பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு.. மார்ச் 10 ரிசல்ட்
டெல்லி: உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய அரசியலில் மிக முக்கியமான சட்டசபை தேர்தலாக உத்தர பிரதேச மாநில சட்டபை தேர்தல் பார்க்கப்படுகிறது. முதல்வர் ஆதித்யநாத்தை முன்னிறுத்தி பாஜக கட்சி மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த முறை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ் வாதி கட்சி ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாதி, காங்கிரஸ் என்ற மிகப்பெரிய நான்கு முனை போட்டி அங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய லோக் தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் முடிவுகளை முக்கிய கேம் சேஞ்சர்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு பாஜக கூட்டணிக்கு அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 15 இடங்கள் உள்ளன.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மை 202 இடங்களில் வெற்றிபெற வேண்டும். உத்தர பிரதேச அரசின் பதவிக்காலம் மே 14, 2022 அன்று முடிவடைகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எத்தனை கட்டம்
7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 2வது கட்ட தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும். 3வது கட்ட தேர்தல் பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும். உத்தர பிரதேசத்தில் 4வது கட்ட தேர்தல் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும். உத்தர பிரதேசத்தில் 5வது கட்ட தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும். உத்தர பிரதேசத்தில் 6வது கட்ட தேர்தல் மார்ச் 3ம் தேதி நடைபெறும்.

தேர்தல் முடிவுகள்
உத்தர பிரதேசத்தில் 7வது கட்ட தேர்தல் மார்ச் 7ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் . உத்தர பிரதேசத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications