இளைய தம்பி! குடும்பத்தோடு விருந்துக்கு வாங்க... வைகோவுக்கு மன்மோகன்சிங் அழைப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது ராஜ்யசபாவில் நேற்று வைகோ பேசியதற்கு மன்மோகன்சிங் பாரட்டு தெரிவித்ததாக மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார் வைகோ. திமுக கூட்டணியின் எம்.பி.யாக இருந்த போதும் காங்கிரஸை வெளுத்து வாங்கினார் வைகோ.

இது விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை வைகோ சந்தித்து பேசினார். இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று வைகோ டெல்லியில் சந்தித்தார்கள். அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மன்மோகன் சிங், மிஸ்டர் வைகோ எனக்கு 86 வயது ஆகின்றது. நான் உங்களுடைய மூத்த அண்ணன். நீங்கள் என்னுடைய இளையதம்பி. என் குடும்பத்தில் ஒருவர்.
உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது. நேற்று நீங்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றியதைப் பார்த்தேன். அருமையாக இருந்தது. உங்கள் குடும்பத்தோடு என் வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சென்னையில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டு நீங்கள் பேசும்போதே என்னை மிகவும் பாராட்டினீர்கள். அதற்காக நன்றி என்று வைகோ தெரிவித்தார். இவ்வாறி மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications