இந்தியா பல நாடுகளாக சிதறிவிடும்; வைகோவின் பேச்சால் அதிர்ந்த அனைத்துக் கட்சி கூட்டம்!
டெல்லி: நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் வைகோ வீசிய குண்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிகார ஆணவத்தில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியா பல நாடுகளாக சிதறிவிடும் எனக் கூறி குளிரூட்டப்பட்ட அறையை அனல் தகிக்க வைத்திருக்கிறார் வைகோ.
அவர் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு;

வீரவணக்கம்
''இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுவரை காணாத அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை அவர்கள் இழந்து இருக்கின்றார்கள். காஷ்மீரில் இருநது கன்னியாகுமரி வரை மக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தனர்.''

10-வது இடம்
''எனவே, இந்த மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெறும் என்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் உறுதி கூறினார். அதன்படி, நடைபெற இருக்கின்ற இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் முதல் நாளே வர வேண்டிய மசோதா, பத்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கின்றது.''

இந்தி எதிர்ப்பு
இந்தியா ஒரு கூட்டு ஆட்சி நாடு. ஆனால், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கின்றது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று, ஒரு சர்வாதிகார நாடு ஆக்கத் துணிந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் எரிமலையாக வெடித்தது. எனவே, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், இணையற்ற ஜனநாயகவாதி, பண்டித ஜவகர்லால் நேரு, மக்கள் விரும்புகின்றவரை, இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என உறுதிமொழி கொடுத்தார்.

அக்னிப் பரிட்சை
ஆனால், சில நாள்களுக்கு முன்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கு ஒரே மொழி இந்திதான்; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம் என்று, அதிகாரத் திமிரோடு கூறி இருக்கின்றார். அப்படித் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறி விடும் என எச்சரிக்கின்றேன். இந்த அக்கினிப் பரீட்சையில், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே ஒழிக்க முனைகின்ற இந்த அரசு, காணாமல் போய்விடும். இவ்வாறு வைகோ அந்தக் கூட்டத்தில் பேசினார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications