Vande Bharat: வந்தே பாரத் பாவங்கள்! வழியனுப்ப வந்து ரயிலுக்குள் சிக்கிய உறவினர்கள்! 36,000 அபராதம் போட்ட ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயிலுக்குள் ஏறி உறவினர்களை வழியனுப்ப சென்றவர்கள், கதவு தானாக மூடிக்கொண்டதால் ரயிலுக்குள் சிக்கியதோடு 140 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். அதுமட்டுமின்றி அந்த 140 கிமீ தூரம் பயணித்ததற்கு ரூ.36 ஆயிரம் அபராதமும் செலுத்தியிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

வாரணாசியில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முற்றிலும் தானியங்கி கதவுகளை கொண்டதாகவும். ரயில் புறப்படும் முன்பாக அனைத்து கதவுகளும் தானாகவே மூடிக்கொள்ளும். இதனை பயணிகள் கையால் திறக்க முடியாது.

Vande bharat Train 12 people fined RS 36 000 after Stuck inside train while send off passengers

ரயிலுக்குள் மாட்டிக்கொண்ட பயணிகள்

எனவே பயணிகளை வழியனுப்ப வருகிறவர்கள், இதை கவனத்தில் கொண்டே செயல்பட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் வழியனுப்ப வருபவர்களும், சில நேரத்தில் ஸ்டேஷனில் இறங்கிவிட்டு மீண்டும் ஏற முடியாமல் தவிப்பதும் அவ்வப்போது நடைபெறுவதை பார்க்க முடிகிறது. தற்போது கான்பூர் ரயில் நிலையத்தில், அப்படியான ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வண்டி எண் 22415 என்ற வந்தே பாரத் ரயில் கான்பூர் ரயில் நிலையத்தில் வந்து நின்றுள்ளது. டெல்லி நோக்கி சென்ற அந்த ரயிலில் பயணிகள் பலரும் ஏறியுள்ளனர். அப்போது பயணிகளை ஏற்றிவிடுவதற்காகவும் அவர்களை சரியான இருக்கையில் அமர வைப்பதற்காகவும் ரயிலில் ஏறிய 12 பேர் கதவு மூடியதால் வெளியில் வர முடியாமல் ரயிலுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

ரயில்வே ஊழியர்களிடம் கெஞ்சினர்

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். வழி ஏற்ற வந்தவர்கள் ரயிலுக்குள் சிக்கிக்கொண்டதால் அவர்களுடன் வந்த உறவினர்களும் பரி தவித்து போயினர். கான்பூர் ஸ்டேஷனில் அவர்களுடன் வந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில், ரயிலுக்குள் மாட்டிக்கொண்டவர்களும் ரயில்வே ஊழியர்களிடம் நிலமையை எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆனால், ரயில் புறப்பட்டுவிட்டதாலும் பாதுகாப்பு காரணங்கள் இருப்பதாலும் கதவுகளை தங்களால் திறக்க முடியாது என்று ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சில பயணிகள் ரயிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

36 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினர்

உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலை பெற்று ரயில் எடவா ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அங்கிருந்த ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் எடவா ஸ்டேஷனில் தயார் நிலையில் நின்றனர். ரயில் நின்றதும் உடனடியாக அவர்களை இறக்கிவிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்ற நிலையில், 12 பேரையும் ரயில்வே போலீசார், ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

உரிய அனுமதியின்றி ரயிலில் ஏறியதால், ரயில்வே விதிகளை மீறியதாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 140 கிமீ தூர தேவையின்றி பயணிக்கப்பட்டது மட்டுமில்லாமல், 12 பயணிகளுக்கும் சேர்த்து என மொத்தம் ரூ.36 ஆயிரம் அபராதமும் கட்டியுள்ளனர்.

எச்சரித்து அனுப்பிய ரயில்வே போலீசார்

ரயிலுக்குள் உரிய டிக்கெட்டோ.. அனுமதியோ இல்லாமல் இனி நுழையக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர். வந்தே பாரத் ரயில்களில் கவனமாக ஏற வேண்டும். சில நொடிகள் தாமதம் ஆனால் கூட கதவு மூடிக்கொண்டால் சிக்கல் என்பதால் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+