மாடு முட்டினாலும் ஒன்னும் ஆகாது.. வந்தே பாரத் அவ்வளவு ஸ்ட்ராங்! விமர்சனங்களுக்கு ரயில்வே விளக்கம்!
டெல்லி: வந்தே பாரத் ரயிலின் முன் பகுதி மாட மோதினால் கூட விபத்தில் சிக்குவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் கவாச் பாதுகாப்பு அம்சத்துடன் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருவதாகவும், கால்நடைகள் மீது மோதினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே விளக்கம் அளித்து இருக்கிறது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.
சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது.

அருகருகே இருக்கும் நகரங்களை இணைக்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்களை தவிர தொலைதூரங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்யும் அதிவிரைவு வண்டிகள் என தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தேஜஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் ரயில் உள்ளிட்டவையும் கூடுதலாக இந்தியாவில் இந்தியன் ரயில்வே சார்பில் சேவையை வழங்கி வருகிறது.
குறிப்பாக வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்ட பின் இந்திய ரயில்வே புதிய புரட்சியை சந்தித்தது என்றே கூறலாம். வந்தே பாரத் ரயிலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவை வழங்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் வந்தே பாரத் அறிமுகமான புதிதில் பல்வேறு சர்ச்சைகளை சந்திக்க நேர்ந்தது. கால்நடைகள் மீது மோதும் போது அதன் முன் பகுதி கடுமையாக சேதம் அடைந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் பாஜக அரசையும் ரயில்வேயையும் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில்,"பசு மாடு முட்டினால் கூட தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளாகும் அபாயம்! வந்தே பாரத் ரயிலின் முன் கோச் சாதா ரயில்களை விட எடை குறைவாம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை. வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள் அமைச்சரே" என மதுரை எம்பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தெற்கு ரயில்வே," வந்தே பாரத் ரயில் பாதுகாப்பான வடிவமைப்பு மற்றும் கவாச் பாதுகாப்பு அம்சத்துடன் இயக்கப்படுகிறது. 160 கிலோமீட்டர் வேகத்திலும் எவ்வித தடையும் இன்றி வந்தே பாரத் ரயிலால் பயணிக்க முடியும். அனைத்து பகுதிகளிலும் விசையின் தாக்கம் இருப்பதால் வந்தே பாரத் ரயில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. கால்நடைகள் உள்ளிட்ட அவற்றின் மீது எதிர்பாராத விதமாக மோதினாலும் வந்தே பாரத் ரயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கால்நடைகளை அகற்றும் வகையில் அதன் முகப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நவீன வசதியுடன் பாதுகாப்பான பயணத்தை வந்தே பாரத் அதிவேக ரயில் பயணிக்க வழங்குகிறது. சுமார் 3500 கிலோமீட்டர் ரயில் பாதை கால்நடைகள் அணுக முடியாத அளவுக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது" என கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications