இந்து கடவுள்களின் பெயர்களுடன் வந்தே மாதரம்! பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை - மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு வரிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இனி, முழு பாடலையும் பாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. உத்தரவை தொடர்ந்து, வந்தே மாதரம் பாடல் குறித்து புதிய விதிகளையும் வகுத்துள்ளது. அதன்படி இனி இந்த பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்துத்துவா கொள்கைதான் பாஜகவின் கோட்பாடு. எனவே, வந்தே மாதரம் பாடலை மீண்டும் முழுமையாக பாட உத்தரவிட்டதன் மூலம் தங்களது கோட்பாட்டை அக்கட்சி மீண்டும் நிலை நிறுத்த முயற்சிக்கிறது.

Vande Mataram

ஏனெனில், இந்த பாட்டில் மொத்தம் 6 சரணங்கள் இருக்கின்றன. பங்கிம் சந்திரர் 1870ல் இந்த பாடலை எழுதியிருந்தார். 1950ல் தேசிய பாடலாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டபோது முதல் 2 சரணங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டன. காரணம் மற்ற 4 சரணங்களில் இந்து கடவுள்களின் பெயர்கள் இருக்கின்றன.

இந்தியாவை துர்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி போன்ற இந்து கடவுகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால், கடவுள் பெயர்களை கொண்ட பாடல்களை எப்படி மற்ற மதத்தினர் பாட முடியும்? என்று கேள்வி எழுகிறது. ஆனால், இந்த கேள்விகயை பொருட்படுத்தாமல், இனி அனைத்து அரசு விழாக்களிலும், சட்டமன்றத்திலும் இந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஒருவேளை இந்த பாடலை அவமதித்தால், அதாவது பாடல் ஒலிக்கும்போது எழுந்து நிற்கவில்லை எனில், அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என பாடல் குறித்து புதிய விதிகளை வகுத்துள்ளது மத்திய அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+