Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காந்தி வெறுப்பால் தேச தந்தையை கேலி செய்யும் மத்திய அரசு.. 100 நாள் வேலை பெயரை மாற்ற லோக்சபாவில் டிஆர் பாலு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: MNREGA எனும் மகாத்கா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பெயரை மத்திய அரசு மாற்றம் செய்யும் வகையில் இன்று லோக்சபாவில் மசோதா கொண்டு வந்தது. மகாத்கா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு அந்த திட்டத்துக்கு விக்சித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் (கிராமம்) (VB-G RAM G) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா இன்று லோக்பசாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பி டிஆர் பாலு, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கிராமத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. முதலில் வைத்த பெயர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.

vb-g-ram-g-bill-father-of-the-nation-is-being-ridiculed-by-these-people-say-dmk-mp-tr-baalu

அதன்பிறகு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி தற்போது கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பலனடைந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகின்றனர்.

பஞ்சாயத்து அளவில் குளம், கால்வாய் உள்பட நீர்நிலைகளை ஆழப்படுத்துவது உள்பட, சாலை விரிவாக்க பணிக்கு உதவுவது என வேலைகளை செய்து வுருகின்றனர். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 154 மில்லியன் மக்கள் (அதாவது 15.4 கோடி பேர்)பயனடைந்து வருகின்றனர். இதில் 3ல் ஒருவர் பெண்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலையுடன் சம்பளம் கிடைக்கிறது.

இந்நிலையில் தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தான் பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதன்படி விக்சித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் (கிராமம்) (VB-G RAM G) என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் குரலை உயர்த்தி மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இருப்பினும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எதிர்ப்பையும் தாண்டி மசோதாவை தாக்கல் செய்தார்.

அதன்பிறகு திமுக எம்பி டிஆர் பாலு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி இன்று அவர் லோக்சபாவில் விவாதிக்க ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்தார். இதனால் மசோதாவுக்கு எதிராக அவர் பேசும்போது, ‛‛மகாத்மா காந்தி மீதான வெறுப்பின் காரணமாக மத்திய அரசு பெயர் மாற்ற மசோதாவை கொண்டு வந்துள்ளது.

தேச தந்தையை மத்திய அரசு கேலி செய்து இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றுவதன் என்ன பலன்? இதனால் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்'' என்று கூறினார்.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி எம்பி பேசுகையில், ‛‛"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஒரு புரட்சிகரமான மசோதா. அது அறிமுகப்படுத்தப்பட்டபோது அனைத்து அரசியல் கட்சிகளாலும் பாராட்டப்பட்டது. இந்த மசோதா கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததுடன், தேவைக்கேற்ப 100 நாட்கள் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. இந்த சட்டம் வேலைக்கான தேவையின் அடிப்படையில் அமைந்தது.

நிதி ஒதுக்கீடு அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப செய்யப்பட்டது. ஆனால் விபி.-ஜி. ராம் ஜி மசோதா ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதுடன், மசோதாவின் 60% நிதியை மட்டுமே மத்திய அரசு ஏற்கும். 40 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் என்கிறது. இது மாநிலங்கள் மீதான நிதிச்சுமையை அதிகரிக்கிறது. இதனால் மசோதாவை திரும்ப பெற்று சிறப்பு குழுவிற்கு அனுப்ப வேண்டும்'' என்றார். அதேபோல் பிற எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+