மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.. ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரும் வேதாந்தா
டெல்லி: தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் திடீரென மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியின் நிலத்தடி நீர், காற்று மாசுபட்டு மக்களின் வாழ்க்கையே நாசமாகிப் போனது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் உக்கிரமான போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடி சீல் வைத்தது.

தமிழக அரசுக்கு கடிதம்
இதன்பின்னர் இந்த ஆலையை திறக்க பல்வேறு வழிகளிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சித்தது. ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ்குமார் நேற்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆக்சிஜன் உற்பத்தி
அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். கொரோனா நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. தமிழக அரசுக்கு உதவும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதேப்போல் மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை வேதாந்தா நிறுவனம் வைத்திருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும்; அப்படி உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை தமிழக அரசுக்கு இலவசமாகவே வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொல்லைப்புற முயற்சி
தூத்துக்குடியில் 13 அப்பாவி உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது வேதாந்தா குழுமம். எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பது தமிழகத்தின் பொதுவான வலியுறுத்தல். ஆனால் கொரோனாவை பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் கொல்லைப்புற வழியில் படுதீவிரமாக இறங்கியிருக்கிறது வேதாந்தா நிறுவனம்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications