வெனிசுலாவை கைப்பற்றிய அமெரிக்கா.. தமிழகம் உள்பட இந்தியாவில் கம்யூ., போராட்டம்.. என்ன தொடர்பு? பின்னணி
டெல்லி: வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இதற்கு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் நள்ளிரவிலேய தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கும் எதிராகவும் நம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொதிப்பது ஏன்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் இன்று கைது செய்துள்ளன. அமெரிக்கா - வெனிசுலா இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்தால் ரூ.438 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஆனால் அமெரிக்காவின் இந்த முயற்சி கைக்கொடுக்கவில்லை.
இநு்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் நள்ளிரவில் போர் விமானங்கள் மூலமாக வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் தாக்கப்பட்டது. 7 இடங்களில் குண்டுகள் வீசப்பட்டது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. இது தான் தற்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாகி உள்ளது.
அமெரிக்காவின் இந்த செயலை நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன. முதற்கட்டமாக தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை கண்டித்து டிஒய்எப்ஐ அமைப்பினர் சார்பில் மதுரை மாநகரில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ற்றும் டிஒய்எப்ஐ நிர்வாகிகள் பங்கேற்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை கண்டித்தும் கோஷமிட்டனர்.
அதேபோல் நள்ளிரவில் மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலீம் தலைமையில் கட்சியினர் கொல்கத்தாவில் ஊர்வலம் சென்றனர். வெனிசுலாவை அமெரிக்கா கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர்களை ஏந்தி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
அமெரிக்கா, வெனிசுலாவை ஆக்கிரமிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை செய்துள்ளது எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கையை கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ வெனிசுலாவை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை உலக நாடுகள் எதிர்க்க வேண்டும்.
அமெரிக்காவின் இந்த செயல் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாத செயல். வெனிசுலாவை மையப்படுத்தி அமெரிக்கா நடத்தும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது கொடூரமான செயல்பாடு. வஞ்சகத் திட்டத்தை திணிக்கும் நடவடிக்கை. இது விரோத போக்கை தூண்டுவிடுகிறது. அப்பட்டமான பயங்கரவாத செயல்'' என கண்டித்துள்ளார். மேலும் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெனிசுலாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் நம் நாட்டில் களமிறங்கி இருப்பதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. வெனிசுலா சீனா, கியூபா உள்பட கம்யூனிஸ்ட்கள் ஆளும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது. மேலும் வெனிசுலாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்குடன் உள்ளன.
வெனிசுலாவில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. 1931-ல் நிறுவப்பட்ட வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சியே (Communist Party of Venezuela சுருக்கமாக PCV) என்பது முக்கிய கட்சியாக இருந்தது. அதன்பிறகு அந்த கட்சி பிளவுப்பட்டது. பல கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது. இந்த கட்சிகள் தான் தற்போது ஆட்சி செய்து வரும் பிஎஸ்யூவி (United Socialist Party of Venezuel அல்லது PSUV) எனும் கட்சியை எதிர்த்து வருகின்றன.
இந்த பிஎஸ்யூவி கட்சியை சேர்ந்தவர் தான் நிகோலஸ் மதுரோ. நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்து இருப்பது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த கைது நடவடிக்கை என்பது வெனிசுலாவை ஆக்கிரமிக்கும் நடவடிக்கை என்று கம்யூனிஸ்ட்கள் நினைக்கின்றன.
இதனை உறுதி செய்யும் வகையில் தான் டொனால்ட் டிரம்ப் கூட வெனிசுலாவை இனி அமெரிக்கா தான் நிர்வகிக்கும் என்று அறிவித்துள்ளார். இதனால் எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா வசம் வெனிசுலா செல்லும் நிலை வரலாம். இதனை அறிந்து தான் நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?











Click it and Unblock the Notifications