Delimitation: அமித்ஷா பேச்சை நம்ப முடியாது.. எதிர்க்கட்சிகள் கேட்கும் வாக்குறுதி இதுதான்!
டெல்லி: தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டுக்கு இப்போது இருக்கும் எம்பி தொகுதிகளை விட அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், வெறுமென வார்த்தைகளால் சொல்வதை விட மசோதாவில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.
எதிர்க்கட்சிகளின் டிமாண்ட் ரொம்பவும் சிம்பிளானது. தொகுதி மறுவரையறை செய்யும்போது.. மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சாரம் மாறாது என்று மசோதாவில் குறிப்பிட வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.

மக்களவையின் மொத்த இடங்களை 543-லிருந்து 850 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதுள்ள இடங்களில் இருந்து சுமார் 50% கூடுதல் இடங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளனர். அதாவது தொகுதி மறுவரையறை மூலம்,
- தமிழ்நாடு: 39-லிருந்து சுமார் 59 இடங்களாக உயரும்
- கர்நாடகா: 28-லிருந்து 42 இடங்களாக உயரும்
- கேரளா: 20-லிருந்து 30 இடங்களாக உயரும்
- ஆந்திரா: 25-லிருந்து 38 இடங்களாக உயரும்
- தெலங்கானா: 17-லிருந்து 26 இடங்களாக உயரும்
என அமித்ஷா உத்தேச பட்டியலை கொடுத்திருக்கிறார். ஆனால், இப்படி வாய்மொழியாக அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக 50% இடங்கள் அதிகரிக்கப்படும் என்று கூறினாலும், மசோதாவின் சட்ட வரைவு வேறு மாதிரி உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
குறிப்பாக மசோதாவின் பிரிவு 4 மற்றும் 8-ல், சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மாற்றி அமைக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது.
சமீபத்திய மக்கள் தொகை அதாவது 2011 அல்லது இனி வரும் கணக்கெடுப்பு அடிப்படையில் இடங்களைப் பிரித்தால், மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்குக் குறைவான இடங்களும், மக்கள் தொகை அதிகம் வளர்ந்துள்ள வட இந்திய மாநிலங்களுக்கு மிக அதிகமான இடங்களும் கிடைக்கும்.
எனவே, தொகுதி மறுவரையறை செய்யும்போது.. மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சாரம் மாறாது என்று மசோதாவில் குறிப்பிட வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.














Click it and Unblock the Notifications