மிகவும் ஆபத்தானது.. பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ரொம்ப ரிஸ்க்! உணவு பாதுகாப்பு ஆணையம் FSSAI உத்தரவு
டெல்லி: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகையாக' வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் இனிமேல் கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.
அதிக ஆபத்துள்ள உணவு வகைகளுக்கு கட்டாய ஆய்வு அவசியம்: புதிய விதியின் கீழ், அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள்.

உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும்.
3ம் பார்ட்டி நிறுவனங்களின் வருடாந்திர தணிக்கைகள்:
FSSAI ஆல் அங்கீகரிக்கப்பட்ட 3ம் பார்ட்டி உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களால் வருடாந்திர தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் பாதுகாப்பாக இருக்கிறதா? அதில் தவறு இருக்கிறதா? தண்ணீர் எப்படி பேக்கேஜ் செய்யப்பட்டு உள்ளது என்பதெல்லாம் இந்த சோதனையில் மேற்கொள்ளப்படும். இத்தனை காலம் ஒரு முறை FSSAI சான்று வாங்கினால் அந்த குடிநீர் நிறுவனம் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படாது. இனி வருடம் ஒருமுறை பாட்டில் நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
எச்சரிக்கை: சமீபத்தில்தான் இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) ஆகியவை இணைந்து வழங்கிய வழிகாட்டுதலில் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
நான் ஸ்டிக் எனப்படும் ஒட்டாத சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அவர்கள் அறிவுறுத்தி உள்ள அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் நான் ஸ்டிக் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக மோசமாக இருப்பதாக அவர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நான்-ஸ்டிக் குக்வேர் அதன் ஒட்டாத மேற்பரப்பு காரணமாக சமைப்பதற்கு வசதியான, விருப்பமாக பாத்திரமாக நீண்ட காலமாக பார்க்கப்பட்டது. இது சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது மற்றும் சமையலுக்கு குறைந்த எண்ணெய் தேவைப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் சுகாதார நிபுணர்களால் எழுப்பப்பட்ட எச்சரிக்கைகள் நான்-ஸ்டிக் குக்வேர்களின் மீது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்தான் நான்-ஸ்டிக் குக்வேர்கள் கடுமையான பக்க விளைவுகளை கொண்டு இருக்கலாம். நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்புகளை கொண்டு இருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர்: ஐசிஎம்ஆர் அறிக்கையில், நான்-ஸ்டிக் குக்வேரின் முதன்மையான கவலைகளில் ஒன்று அதில் இருக்கும் அமிலங்கள் என்று கூறப்பட்டு உள்ளது. பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (பிஎஃப்ஓஏ) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (பிஎஃப்ஓஎஸ்) ஆகியவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.
இவை டெஃப்ளான் போன்ற ஒட்டாத பூச்சுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும். ஒட்டாத சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது, இந்த இரசாயனங்கள் நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடலாம், இந்த புகையை சுவாசிக்கும் நபர்களுக்கு உடல்நல அபாயங்கள் ஏற்படும்.
இந்த புகைகளை உள்ளிழுப்பது சுவாச பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. PFOA ஆனது polyfluoroalkyl (PFAS) எனப்படும் இரசாயனங்களின் வகுப்பைச் சேர்ந்தது. PFOA உடலில் சேர்ந்தாலும் சில நாட்களில் படிப்படியாக கரைந்துவிடும். ஆனால் சில வகை PFAS கலவைகள் உடலில் தங்கி விடும். இதனால் உடலில் கடும் பாதிப்புகள் ஏற்படலாம். இது சில நான்-ஸ்டிக் குக்வேர்களில் இன்னும் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications