"உடனே ஆர்டர் பண்ணுங்க".. டெல்லியில் இரவு விருந்து.. "கனிமொழிக்கு" துணை ஜனாதிபதி கொடுத்த சர்ப்ரைஸ்!
டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த இரவு விருந்து ஒன்றில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திமுக எம்பி கனிமொழி சோமுவிற்கு முக்கியமான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவு பெற்றது. இதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார்.

என்ன நடந்தது?
ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை சபாநாயகராகவும் செயல்படுவார். ஆனால் இவர் பதவிக்கு வந்ததில் இருந்தே மாநிலங்களின் எம்பிக்களை ஒன்றாக சந்திக்கவில்லை. இவர்களை ஒன்றாக சந்தித்து அவர் ஆலோசனையை செய்யவில்லை. பொதுவாக துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவை எம்பிக்களை சந்திப்பது வழக்கம். ஆனால் ஜெகதீப் இந்த சந்திப்பை நடத்தாமல் இருந்தார்.

சந்திப்பு
இந்த நிலையில்தான் திடீரென நேற்று ஜெகதீப்.. மாநிலங்களவை எம்பிக்களுக்கு விருந்து கொடுத்தார். திமுக எம்பிக்கள், பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் என்று பலருக்கும் இதற்காக அழைப்பு விடுத்து இருந்தார். கட்சி கடந்து பல எம்பிக்கள் இதில் கலந்து கொண்டனர். திமுக சார்பாக திருச்சி சிவா எம்பி, கனிமொழி சோமு எம்பி உள்ளிட்ட பல தமிழ்நாடு எம்பிக்களும் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் விருந்திற்கு பின் ஆலோசனை செய்து கொண்டு இருந்தனர்.

ஆலோசனை
அந்த ஆலோசனையின் போது திடீரென எம்பிக்கள் சிலர் இன்று கனிமொழி சோமுவின் பிறந்த நாள் என்று கூறினர். இதையடுத்து அங்கு இருந்த எம்பிக்கள் எல்லோரும் கனிமொழி சோமுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். இதை கேட்ட துணை ஜனாதிபதி ஜெகதீப் உடனே.. கனிமொழி சோமுவை அழைத்து வாழ்த்தினார். அதோடு கேக் வாங்கி வரும்படி உதவியாளர்களிடம் சொன்னார்.

உதவியாளர்கள்
உடனே உதவியாளர் வேகமாக செயல்பட்டு கேக் வாங்கி வந்தனர். ஆனால் இந்த விஷயம் கனிமொழி சோமுவிற்கு தெரியாது. இதையடுத்து சர்ப்ரைஸாக கேக்கை கொண்டு வந்து அங்கே வெட்டினார்கள். இதை எதிர்பார்க்காத கனிமொழி சோமு ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார். கட்சி கடந்து கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா நாடாளுமன்ற வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications