ஆமா வெள்ளையா இருக்கே அது என்னாது? சுரேஷ் கோபியிடம் ஜாலியாக கேட்ட வெங்கய்ய நாயுடு.. அவையில் சிரிப்பலை
டெல்லி: நாடாளுமன்றத்தில் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு எம்பி சுரேஷ் கோபியிடம் கேட்ட காமெடியான கேள்வி வைரலாகி வருகிறது.
Recommended Video
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அது போல் மாநிலங்களவையிலும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவையில் பாஜகவை சேர்ந்த நியமன எம்பியான சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் பேசினார்.

வெங்கய்ய நாயுடு
அப்போது அவரை பார்த்த வெங்கய்ய நாயுடு காமெடியாக கேட்ட கேள்வியும் அதற்கு சுரேஷ் கோபி கூறிய பதிலும் வைரலாகி வருகிறது. சுரேஷ் கோபி பேச முற்படும் போது "நீங்கள் முகக் கவசம் அணிந்துள்ளீர்களா, அல்லது அது தாடியா என கேட்டுள்ளார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபியும் சிரித்துக் கொண்டே சார் இது தாடிதான், என்னுடைய புதிய படத்திற்கான புதிய லுக் என கூறினார். இந்த பதிலால் திருப்தி அடைந்த வெங்கய்ய நாயுடு, சுரேஷ் கோபி தனது பேச்சை தொடருமாறு கூறினார். பின்னர் தனது பேச்சை அவர் தொடர்ந்தார்.

சிரிப்பலை
பொதுவாக வெங்கய்ய நாயுடு இருக்கும் இடத்தில் சிரிப்பு சப்தம் அதிகமாக இருக்கும் என்பார்கள். காரணம் அவர் எப்போது கலகலப்பாக பேசுவார். எதிர்க்கட்சியினர் கோபமாக பேசினாலும் அதை தனது நகைச்சுவை பேச்சால் தணித்துவிடுவார்.

பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள். இதை கண்டித்து ஆங்காங்கே போராட்டம், ஸ்டிரைக் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் விலை உயர்வை கண்டித்து இரு அவைகளிலும் வருங்காலத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications